full screen background image

‘ஆதார்’ படம் சென்சாரில் தப்பியது..!

‘ஆதார்’ படம் சென்சாரில் தப்பியது..!

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான இந்த ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்தப் படத்தின் படத் தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் முன்னோட்டம் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘U / A’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

ஆதார் அட்டையை மையப்படுத்தி சர்ச்சையைக் கிளப்பும்வகையிலான கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகியிருப்பதால், நிச்சயமாக சென்சாரில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில்… அது மாதிரியில்லாமல் படம் சென்சார் ஆகியதில் தயாரிப்பாளர் தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Our Score