இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வரும் ஜனவரி மாதம் 2016-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகளில் சிறந்த இசையமைப்புக்கான பிரிவில் நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இடம் பிடித்திருக்கிறார்.
இவர் இசையமைத்த ‘Pelé: Birth of a Legend’ என்கிற படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மேலும் 2011-ம் ஆண்டு ‘127 Hours‘ என்கிற ஆங்கில படத்திற்காக Best Original Music Score and Best Original Song ஆகிய பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இப்போது உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான பீலேவின் வாழ்க்கை வரலாற்று சரிதமான ‘Pele Birth of Legend’ என்கிற படத்துக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
விருது கிடைக்க வாழ்த்துகிறோம்..!