full screen background image

‘கோச்சடையான்’ இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை..!

‘கோச்சடையான்’ இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை..!

‘கோச்சடையான்’ படத்தின் சிறந்த இசை அமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் 2014-ம் ஆண்டு்ககான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

87-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்தாண்டு பிப்ரவரி 22-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்லில் நடக்க உள்ளது. விருதுகள் பெறவிருக்கும் படங்களின் முன்னோட்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 114  படங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோச்சடையான்’ தமிழ்ப் படத்தில் சிறப்பான இசையமைத்ததற்காக ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

‘கோச்சடையான்’ தவிர்த்து ’தி 100 ஃபூட் ஜார்னி’, மற்றும் ’மில்லியன் டாலர் ஆர்ம்’ உள்ளிட்ட படங்களின் சிறந்த இசையமைப்புக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரஹ்மான் ஏற்கெனவே 2008-ம் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

மேலும் 2010-ம் ஆண்டில் ‘127 hours’ படத்தின் இசையமைப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இப்போது மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்து ஒவ்வொரு பிரிவிலும் 5 இறுதி போட்டியாளர்களை தேர்வு செய்து வெளியிடுவார்கள்.  இந்த இறுதிப் பட்டியல் ஜனவரி 15-ம் தேதி வெளியாகவுள்ளது.

Our Score