full screen background image

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

சோழர்கள் வரலாற்றை மறைத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி இதற்குரிய விளக்கம் அளிக்கக் கோரி இயக்குநர் மணிரத்னம், நடிகா் விக்ரம் உட்பட 13 பேருக்கு மக்கள் தராசு இயக்கத்தின் தலைவர் ஆர்.டி.ஐ.செல்வம் (எ) செல்வராஜ் சென்ற மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் வரும் 31-ம் தேதியன்று வெளிவரக் கூடிய பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரைப்பட தணிக்கை குழு வாரியத்திலும் இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டு, பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள U/A சான்றிதழை திரும்ப பெற வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.

அதே போல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில், திரைப்பட தணிக்கை குழு, OTT நிறுவனம் மற்றும் Google நிறுவனமும் பிரதிவாதிகளாக சேர்க்கப்படுவார்கள் என்றும் அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Our Score