அறிமுக இயக்குநர் சந்தோஷ் பிரபாகரனின் திரைப்படம் இன்று துவங்கியது.!

அறிமுக இயக்குநர் சந்தோஷ் பிரபாகரனின் திரைப்படம் இன்று துவங்கியது.!

தயாரிப்பாளர் Dr.S.கேதார்நாத் அவர்களின் சிவோம் Productions’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் இன்றைக்கு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கதையின் நாயகர்களாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களாக  நான்கு நாயகர்கள் களமிறங்க உள்ளார்கள்.

கதையின் நாயகியாக கன்னிகா களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகான மதுரை மாநகரை சார்ந்த பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தில் பல புதுமுக நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர்.

நாடோடிகள்’, ‘தூங்கா நகரம்’, ’அஞ்சாதே’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

கணேசபுரம்’, ‘கல்தா’ போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வாசு, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

மேலும் சீனு ராமசாமி மற்றும் பிரபு சாலமன் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய கலை இயக்குநர் விஜய் தென்னரசு கலை வடிவமைப்பாளராக தனது பங்கினை அளிக்கவுள்ளார்.

இயக்குர் முருகானந்தத்தின் உதவி இயக்குநரான சந்தோஷ் பிரபாகரன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

பெண்களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது.

கதையின் களம் நாயகன் மற்றும் நாயகியை சார்ந்து இல்லாமல் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மற்றும் மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தியும், பெண்கள் புரியும் சமூக சீர்திருத்ததை மையப்படுத்தியுமே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.