‘ஆற்றல்’ படத்தில் நடிகர் விதார்த்தோடு நடித்திருக்கும் கார்…!

‘ஆற்றல்’ படத்தில் நடிகர் விதார்த்தோடு நடித்திருக்கும் கார்…!

செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ‘ஆற்றல்’.

படத்தில் கதாநாயகியாக ஸ்ரிதா, வில்லனாக வம்சி கிருஷ்ணா மற்றும்  சார்லி, வையாபுரி, விக்கி ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  – கொளஞ்சி  குமார், இசை – அஸ்வின்  ஹேமந்த், படத் தொகுப்பு – விஜய்  வேலுக்குட்டி, பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் – வீர சமர், எழுத்து, இயக்கம் – கே.எல்.கண்ணன்.

இந்தப் படத்தில் விதார்த்தோடு இணைந்து  ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.

ஒரு கார்  எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ  முடியும்…? டெக்னலாஜியை வைத்து  எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும்  என்பதை  இந்தப் படம் பேசுகிறதாம். 

“படம் முழுக்க ஒரு காரை  ஒரு  கதாபாத்திரமாக  வடிவமைத்து அதை ரசிக்கும்விதமாக படமாக்கியிருக்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கேள்வியிருக்கும்… ஒரு கார் எப்படி நடித்திருக்க முடியும் என்று..? அது படம் பார்க்கும் பொழுதுதான் தெரியும்…” என்றார் இயக்குநர் கே.எல்.கண்ணன்.

சமீபத்தில்  இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Our Score