full screen background image

‘அவன் இவன்’ படத்தில் திருநங்கையாய் நடித்த அனுபவம் – நடிகர் விஷாலின் பேச்சு..! 

‘அவன் இவன்’ படத்தில் திருநங்கையாய் நடித்த அனுபவம் – நடிகர் விஷாலின் பேச்சு..! 

மகளிர் தினத்தையொட்டி திருநங்கைகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசும்போது ‘அவன் இவன்’ படத்தில் தான் திருநங்கையாய் நடித்தபோது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

12822768_462181533978518_685513760_o

விஷால் தன் பேச்சின்போது, “வாழ்க்கையில் எனது 1 மணி நேரத்தை இன்று இங்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து,  வீணடித்துவிட்டேன். நீங்கள் பேசிய விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாமே ஏதோ கட்டாயத்தின் பேரில் படித்து, முடித்து இப்படி செய்வேன், இப்படியெல்லாம் சாதிப்பேன் என்று சொல்வதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை, நான் இங்கே இதை சொல்லணும்னு முடிவு பண்ணித்தான் இவ்ளோ நேரம் இங்கே இருந்தேன், சொல்லிட்டேன். அவ்ளோதான்.

நான் என் கண்ணால பார்த்த்தையெல்லாம் உங்களால் சத்தியமாக சாதிக்கமுடியாது. இந்த விஷால் இல்லை, எந்தக் கொம்பன் சொன்னாலும் நம்பாதீங்க. எப்பவுமே உங்களுடைய தன்னபிக்கையை தளரவிடாதீங்க. அதுக்காத்தான் இப்படி சொன்னேன். இங்கே நடிகனாக வந்தவர்களுடைய வெற்றி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தோல்வி அடைந்தவர்களை மண்ணுக்குள் போட்டு மூடி விடுவார்கள். 

என்னுடைய முதல் படமான ‘செல்லமே’யில் என்னைப் பார்த்துவிட்டு என்னைப் பற்றி ஏளனமாகப் பேசியவர்கள், பிற்காலத்தில் என்னிடமே வந்து, “எனக்கு இன்னொரு படம் பண்ணித் தாங்க, நான் கொஞ்சம் கஷ்டத்தில இருக்கேன்”னு சொன்னாங்க, அதுதான் என்னோட தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. என்னுடைய முதல் படத்திலிருந்து இன்றுவரை நான் சம்பாதித்த சொத்து என்னுடைய தன்னம்பிக்கை.

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு அனுபவம் எனக்கு இயக்குநர் பாலா அவர்களின் ‘அவன் இவன்’ படத்தின் 17 நாட்களில் கிடைத்தது. அதை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 4 மணி நேர மேக்கப்பிற்குப் பிறகுதான் ஷூட்டிங் ஆரம்பிக்கும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம், கால்களில் ஆரம்பித்து இடுப்பு மடிப்புவரை ஜூம் செய்து  எடுத்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல சக டெக்னீசியன்களின் கிண்டல், கேலியுடன்தான் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் கேமராமேன், “சார் கொஞ்சம் சேலையை ஒதுக்குங்க”ன்னு கேட்டார். நான் “முடியாது”ன்னு சொல்லி தவிர்த்துவிட்டேன். பாலா சார் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

இதை நான் இங்கே பதிவு செய்வதற்கு ஒரு முக்கியமான காரணம், என்னுடைய அன்றைய மனநிலை, புதுமுக நாயகிகள் கிளாமராக நடித்தபோது, தன் குடும்பம் இதைப் பார்க்குமே என்ற பதைபதைப்புடன் இருந்திருக்கும்.. அது போன்ற மனநிலையில்தான் அன்றைக்கு நானும் இருந்தேன். என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத அனுபவம்,17 நாள் பெண்ணாக நான் இருந்தது. அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை படப்பிடிப்பு முடிந்த பிறகும் என்னுடைய அம்மா உணர்ந்தார்கள்.

என்னுடைய கேரியர் அந்தப் படத்துடன் முடியப் போகிறது என்று பல பேர் என் காதுபடக் கூறினார்கள். நான் கடவுளாய் மதிக்கும் இயக்குநர் பாலா, சொல்ல நினைக்கும் ஒரு விஷயம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில், முழு ஈடுபாட்டுடன் அந்தப் படத்தில் நடித்தேன். அந்தச் சமயத்தில் நான் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

என்னுடைய வெற்றிக்கு மட்டுமில்லை. என்னால் இயன்றவரை நான் செய்யும் அனைத்து நல்ல செயல்களுக்கும் காரணம் என் அம்மாதான். நான் சில கல்லூரிகளுக்கு விருந்தினராக செல்லும்போது பணம் வாங்குவேன், முதலில் அது கேவலமாகத்தான் தோன்றியது, ஆனால் யோசித்தேன், இருக்கிறவங்க கொடுக்கிறாங்க, அதை வைத்து இல்லாதவங்களை படிக்க வைக்கலாம்னு தோன்றிய அந்த எண்ணம்தான்,.” என்றார் விஷால்.

Our Score