full screen background image

அரசியல்வாதியை உரித்தெடுக்கும் படம்தான் ‘உறியடி’..!

அரசியல்வாதியை உரித்தெடுக்கும் படம்தான் ‘உறியடி’..!

Souvenir productions சார்பில் விஜய்குமார் தயாரித்து எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘உறியடி’.

இந்தப் படத்தில் விஜய்குமார், மைம் கோபி, சிட்டிசன் சிவக்குமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள், ஹன்னா பெல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன், படத் தொகுப்பு – அபினவ் சுந்தர் நாயக், பாடல்கள் இசை – மசாலா காபி குழுவினர், பின்னணி இசை – விஜய்குமார், சண்டை பயிற்சி – விக்கி, மக்கள் தொடர்பு – நிகில், டிசைன்ஸ் – பெப்பர்ஸ், ஒலிப்பதிவு – கிருஷ்ணமூர்த்தி, இணை தயாரிப்பு – நலன் குமாரசாமி, சமீர் பரத் ராம், சதீஷ், சுவாமிநாதன், எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – விஜய்குமார்.

படம் பற்றி பேசிய இயக்குநர் விஜய்குமார், “தங்களது நண்பனை தாக்கியவர்களை பழிக்குப் பழி வாங்க முற்படும் நண்பர்கள் பற்றி கதை இது. இடையில் அவர்களின் அறியாமையை தன் சுய லாபத்திற்காக பயன்படுத்த முயற்சிக்கும் ஒரு அரசியல்வாதியையும் இணைத்த திரைக்கதையில் விறுவிறுப்பான வகையில் படம் உருவாகியிருக்கிறது. விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.

Our Score