full screen background image

ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’ டீஸர் நாளை வெளியாகிறது..!

ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’ டீஸர் நாளை வெளியாகிறது..!

PTS Film International சார்பில் T.S.பொன்செல்வி தயாரித்துள்ள படம் ’போக்கிரி ராஜா’.

இதில் ஜீவாவும், ஹன்ஸிகா மோத்வானியும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். D.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.

இந்தப் படம்  ஜீவாவிற்கு 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ‘போக்கிரி ராஜா’ படம் பற்றி கேள்விப்பட்டு படத்தின் தலைப்பை தேர்வு செய்தமைக்காக படக் குழுவினரை மிகவும் பாராட்டியுள்ளார்.

முதன்முறையாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஜீவாவின் இந்தப் படத்திற்கு பெருமளவு ஆதரவளித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Our Score