full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜூன் 26, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜூன் 26, 2015

இன்று 2015 ஜூன் 26 வெள்ளியன்று 5 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.

1.யாகாவராயினும் நா காக்க

ஆதி ஹீரோவாக நடிக்க அவரது நண்பர்களாக கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் என 3 புதியவர்கள் நடித்திருக்கிறார்கள். நாயகியாக நிக்கி கல்ரானி தமிழில் அறிமுகமாகிறார். ‘ஷாஜகான்’ நாயகி ரிச்சா பலோட்டும் நடித்திருக்கிறார்.

Yagavarayinum Naa Kaakka Movie Poster-1

பசுபதி, நாசர், பிரகதி, ராமராஜு, கிட்டி, நரேன், ‘பிதாமகன்’ மகாதேவன், ஹரீஷ் ஆகியோருடன் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு ஷமி, இசை ப்ரவீன், ஷ்யாம், ப்ரசன் என புதியவர்கள் மூவர். எடிட்டிங் தேசிய விருது பெற்ற சாபு ஜோசப், நடனம் தினேஷ். ரவிராஜா பினிசெட்டி தயாரித்திருக்கிறார். சத்யபிரபாஸ் இயக்கியிருக்கிறார்.

2.இன்று நேற்று நாளை

indru netru naalai-poster-2

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது, ரவிக்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால்,  மியா ஜார்ஜ்,  கருணாகரன் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு அறிமுக ஒளிப்பதிவாளர் வசந்த். இசை ‘ஹிப் ஹாப் தமிழா’ புகழ் ஆதி. படத் தொகுப்பு லியோ ஜான்பால்.

3.காவல்

kaaval-poster-1

எஸ்.ஜி. பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் புன்னகைப் பூ கீதா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் விமல், சமுத்திரக்கனி, புன்னகைப் பூ கீதா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – ஏகாம்பரம், எடிட்டிங் – ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆர்.நாகேந்திரன் இயக்கியிருக்கிறார்.

4.மூணே மூணு வார்த்தை

Capital Film Works  சார்பில் S.P.B. சரண் தயாரித்திருக்கிறார். இதில், S.P. பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குனர் பாக்யராஜ், அறிமுக நாயகன் அர்ஜுன் சிதம்பரம், ‘சுட்டகதை’ வெங்கி மற்றும் அதிதி செங்கப்பா என்று  பலரும் நடித்திருக்கிறார்கள்.

moonea moonu vaarthai poster

ஒளிப்பதிவு – சீனிவாசன் வெங்கடேஷ், எடிட்டிங் – கிரண்கன்டி, இசை – கார்த்திகேய மூர்த்தி, பாடல்கள் – சுபு, ராஜீவ், ராஜாராம், கோ சேஷா, கார்க்கி, கார்த்திகேய மூர்த்தி, இயக்கம் – மதுமிதா.

5.லொடுக்கு பாண்டி

lodukku paandi-psoter

கருணாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக நேகா சக்சேனா நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு ஜெய் ஆனந்த். இசை – எம்.எஸ்.தியாகராஜன், ரஜினீஷ் இயக்கியிருக்கிறார்.

டெமான்ட்டி

ஆங்கில டப்பிங் படம்

Our Score