S.P.B. சரண் தயாரிப்பில், மதுமிதா இயக்கும் ‘மூணே மூணு வார்த்தை‘ திரைப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் நேற்று மாலை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. பாடலை பிரபல பின்னணி பாடகர் S.P. பாலசுப்ரமணியம் வெளியிட்டார்.
பின்னர் ‘மூணே மூணு வார்த்தை’ திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை பாடி இசை வெளியீட்டு அரங்கை தன் காந்தகுரலால் கவர்ந்திழுத்தார்.
தனது மகனை வாழ்த்திப் பேசிய SPB அவர்கள், இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் அத்தனை கலைஞர்களின் பெற்றோர்களையும் மேடையேற்றி பெருமைப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
“அறிமுக இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி அச்சு-அசல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் போல் உள்ளதை கண்டு மலைத்து போனேன். இந்த இளைஞனும் அவரை போல் பல சாதனைகள் புரிய என் ஆசிகள்..” என்று கூறி வாழ்த்தினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
“நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பாடலை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அவர்களின் வரவேற்பும், ஆரவாரமும் மிகுந்த உற்சாகத்தையும் தருகிறது” என்றார் இயக்குனர் மதுமிதா.









