full screen background image

“இது ஒரு ஜாலியான லைட்டான காதல் திரைப்படம்” – ‘ஹலோ காதல்’ படம் பற்றி நடிகர் ஆர்யா பேச்சு!

“இது ஒரு ஜாலியான லைட்டான காதல் திரைப்படம்” – ‘ஹலோ காதல்’ படம் பற்றி நடிகர் ஆர்யா பேச்சு!

டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ திரைப்படம் – டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலம்!

நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’.

காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
 
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 23) சிலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், “‘ஹலோ காதல்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. இப்படத்தில் நடித்து தயாரித்திருக்கும் ஜாமுடன் இணைந்து எனது திரைப் பயணத்தைத் தொடங்கினேன். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’ எனத் தொடர்ந்து இருவரும் இணைந்து பல முக்கியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளோம்.

மலையாளத்தில் வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் நிகில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ‘ராஜா ராணி’ படத்தைப் போலவே இனிமையான காதல் கதையைக் கொண்டுள்ளது.
 
ஆர்யா, நிகிலா, வைஷ்ணவி ஆகிய மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்தில் ஆர்.ஜே. பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
 
‘கண்ணும் கண்ணும்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதற்கான பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
‘ஹலோ காதல்’ திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இப்படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

கராத்தே கார்த்தி பேசுகையில், “இந்தப் படம் எனக்கு மூன்று விதங்களில் சிறப்பானது. முதலாவதாக, கிராமத்துப் பின்னணியில் தென்காசி பேச்சு வழக்கில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் நிகில் முரளி மற்றும் படக் குழுவினருக்கு நன்றி.

இரண்டாவதாக, ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இயக்கத்தில் ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் இணைந்து முதன்முறையாக ஸ்டண்ட் காட்சியில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
 
மூன்றாவதாக, ஷெரிஃப் மாஸ்டர் என்னை நடனமாட வைத்துள்ளார். கதாநாயகன் ஆர்யா சார் எனக்கு மிகப் பெரிய உத்வேகமாக இருக்கிறார்.
 
பல ஆலோசனைகளையும், டிப்ஸ்களையும் வழங்கி வருகிறார். அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

யுவராஜ் கணேஷ் பேசுகையில், “என் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் நிகில் ப்ரோவுக்கு நன்றி.

சிறு வயதிலிருந்தே ‘பட்டியல்’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘நான் கடவுள்’ போன்ற படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இன்று ஆர்யா சாருடன் இணைந்து நடிப்பது எனது நடிப்புப் பயணத்தில் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம்.
 
நிகிலா மேமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், வைஷ்ணவி மேமுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய படக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

சுனில் கார்த்திக் பேசுகையில், “இது எனது முதல் மேடை அனுபவம். இப்படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நிகில் சார், ஆர்யா சார், தயாரிப்பாளர்கள் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

விஜே பப்பு பேசுகையில், “இன்று மேடையில் பேச அழைக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் எனது அப்பாவுடன் ஜாக்கிங் செல்லும்போது ஆர்யா சாரையும் ஜாக்கிங் மற்றும் சைக்கிளிங் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட இடத்திலிருந்து இன்று ஆர்யா சாரின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இதை முதலில் வீட்டில் சொன்னபோது அப்பா கிண்டலாகப் பேசினார். வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்.
 
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அனைவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பாருங்கள்” என்றார்.

முத்தமிழ் பேசுகையில், “‘குடும்பஸ்தன்’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். சிவா மற்றும் சிவபிரகாஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நிகில் சாரைச் சந்தித்து இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

ஏற்கெனவே ஜீவா சாருடன் நடித்திருந்தாலும், ஆர்யா சாருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.
 
ஆர்யா சாரும் நிகிலா மேமும் மிகவும் நட்பாகவும் கலகலப்பாகவும் பழகினார்கள். அதனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடிக்க முடிந்தது.
 
படப்பிடிப்பின்போது ‘குடும்பஸ்தன்’ படம் குறித்தும் ஆர்யா சாரிடம் பேசினேன். ‘சர்வம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் பார்த்தது போலவே இப்போதும் ஆர்யா சார் இருக்கிறார். அவருடைய அறிவுரையால் எனது உடல் எடையையும் குறைத்தேன்.
 
நிகிலா மேம், நிகில் முரளி சார் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகை வினோதினி பேசுகையில், “இந்த வாய்ப்பை வழங்கிய படக் குழுவினருக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்யா சாரின் படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நிறைய பிரார்த்தனை செய்திருக்கிறேன்.

எனது இரண்டு குழந்தைகளுக்கும் ஆர்யா சாரை மிகவும் பிடிக்கும். படப்பிடிப்புத் தளத்தில் இதுபற்றிக் கூறியவுடன், ஆர்யா சார் உடனடியாக வீடியோ கால் மூலம் எனது குழந்தைகளிடம் அன்பாகப் பேசினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 
இன்றைய காலகட்டத்திலும் மிகவும் எளிமையாகப் பழகும் ஆர்யா சாரின் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றி” என்றார்.

கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் பேசுகையில், “சந்தானம் சார் படங்களில் தொடர்ச்சியாகப் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஆர்யா சாரைச் சந்தித்தபோது, என்னைப் பார்த்து ரைட்டர் பொன் பார்த்திபன் போல இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இது ஓர் அற்புதமான காதல் கதை என்பதால், அதற்கேற்ப அழகான செட்கள், லொகேஷன்கள் மற்றும் இன்டீரியர்களை உருவாக்கியுள்ளோம். கிஷோர் சார் மற்றும் மதன் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தனர்.
 
ஜீவா சார் ஒவ்வொரு காட்சியையும், பாடல்களையும், புகைப்படங்களையும் மிக அழகாகப் படமாக்கியுள்ளார். இயக்குநர் நிகில் சாரின் திரைக்கதை, சிவா மற்றும் ஆர்ட் குழுவினரின் திட்டமிட்ட உழைப்பு, நடன இயக்குநரின் சிறப்பான பணி என அனைத்தும் படத்திற்கு வலு சேர்த்துள்ளன.
 
சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்கும் சுவாரசியமான காதல் படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி” என்றார்.

சண்டை இயக்குநர் சில்வா பேசுகையில், “இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருந்தாலும், ஆர்யா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு ஒரு சண்டைக் காட்சியில் பணியாற்ற வாய்ப்பளித்த நிகில் சாருக்கு நன்றி.

பல நடிகர்கள் வெற்றிக்குப் பிறகு தங்களது உடலைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
 
ஆனால் ஆர்யா சார் விளையாட்டுப் பிள்ளை போலத் தெரிந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உடலைச் செதுக்கி வருகிறார். அவருடைய நட்பு வட்டாரமும் சிறப்பானது.
 
ஜீவா சங்கர், மோகன் சார், நிகில் சார் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் தயாரிப்பு, நடிப்பு, இசையமைப்பு என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
 
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் நௌஷத் அகமது பேசுகையில், “ஆர்யா சாருடன் ‘வேட்டுவம்’ படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. தொடர்ந்து ‘சார்பட்டா-2’ வரை எங்களது பயணம் தொடர்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆர்யா சாருக்கு நன்றி.

இப்படத்தில் இவ்வளவு தூரம் பயணிக்க உறுதுணையாக இருந்த நிகில் ப்ரோவுக்கும், எனது குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

படத்தொகுப்பாளர் பினு நெப்போலியன் பேசுகையில், “இது எனது முதல் தமிழ்த் திரைப்படம். எனக்கு இது ஒரு கனவு நனவான தருணம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நிகில், ஏ.ஜே.எஸ்.ஆர். கிஷோர் சார் மற்றும் மதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடன இயக்குநர் எம். ஷெரிஃப் பேசுகையில், “ஆர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தில் ‘கண்ணும் கண்ணும்’ உள்ளிட்ட மூன்று பாடல்களுக்கு நடன அமைப்பு செய்துள்ளேன்.

ஜீவா சங்கர் சார் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகப் படமாக்கியுள்ளார். அறிமுகப் பாடலைப் பிரம்மாண்டமாக உருவாக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.

இயக்குநர் நிகில், ஜி.வி. பிரகாஷ் சார், செல்வா மாஸ்டர், அருண், மதன், கிஷோர் சார், நிகிலா, ஷாம் சார், சதீஷ் சார் மற்றும் அபிஷேக் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாண்டிச்சேரியில் படமாக்கிய அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் பேசுகையில், “இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நேர்மறையான ஃபீல் குட் திரைப்படம் ஜாம் மூலமாகக் கிடைத்துள்ளது.

‘உள்ளம் கேட்குமே’ படத்தின்போது ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது. இப்படத்தின் மூலம் ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு ஜி.வி. பிரகாஷ் சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.
 
கதையையும், காட்சிகளின் விவரங்களையும் மிகத் தெளிவாக வழங்கிய இயக்குநர் நிகில், தயாரிப்பாளர்கள் கிஷோர் மற்றும் ஜாம் ஆகியோரின் முழு ஒத்துழைப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவை சிறப்பாக இருந்தன.
 
நடன இயக்குநர் ஷெரிஃப், எடிட்டர் பினு, செல்வா மாஸ்டர், நௌஷத், கலை இயக்குநர் மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
 
பாண்டிச்சேரியில் புதிதாக உருவாக்கப்பட்ட லொகேஷன்களில் படமாக்கிய அனுபவம் தனித்துவமானது. பாடல்களும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
 
டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகர் சதீஷ் பேசுகையில், “ஆர்யா என்னை மிகவும் நேசிக்கும் ஒரு சிறந்த மனிதர். யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக நிற்பவர்.

என்னை ‘கஜினிகாந்த்’ படத்தில் நடிக்க வைத்ததோடு, ஆர்யாவின் திருமண விஷயத்திலும் நான் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் காலத்திலிருந்து எங்களது நட்பு தொடர்கிறது.
 
ஜி.வி. பிரகாஷ், நிகிலா, வினோதினி மேடம் மற்றும் மாஸ்டர் ஆகியோரின் திறமைகளைப் பாராட்டுகிறேன். எனது கடினமான காலகட்டத்தில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.
 
டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ‘ஹலோ காதல்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

தினேஷ் குமார் பேசுகையில், “மலேசியாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைச் சிறப்பாக அழைத்து அறிமுகப்படுத்திய ஆர்யாவுக்கு நன்றி.

சிறு வயதிலிருந்தே ஆர்யாவின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவரை மிகப் பெரிய உத்வேகமாகக் கருதுகிறேன்.

மலேசியாவில் வெளியான ‘மிஸ்டேக்ஸ்’ திரைப்படம் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து மேற்கொண்ட விளம்பரப் பணிகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்யா மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர்.
 
‘டெனிஸ்’ நம்பிக்கை வைத்து வாங்கிய படத்திற்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் பணியாற்றியவிதம் என்னை மிகவும் கவர்ந்தது.
 
இப்படத்தின் விளம்பரத்திற்காக எனது மனைவி விமலா பெருமாளுடன் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன். படத்தின் வெற்றிக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

ஷாம் பேசுகையில், “‘ஹலோ காதல்’ திரைப்படம் மிகவும் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கிறது. திருமணமானவர்கள் மற்றும் காதலர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

ஜீவா சங்கர், நடன இயக்குநர் ஷெரிஃப் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோரின் திறமைகள் பாராட்டுக்குரியவை. ஜி.வி. பிரகாஷின் பாடல்களுக்கு நான் தீவிர ரசிகன். இப்படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
 
‘உள்ளம் கேட்குமே’ படத்தின் காலத்திலிருந்து ஆர்யாவுடனான நட்பு தொடர்கிறது. அவருடைய எளிமையான குணமும், உதவும் மனப்பான்மையும் பாராட்டுக்குரியவை. அவரை வழிநடத்திச் செல்லும் தயாரிப்பாளர் கிஷோர் சாரின் பங்களிப்பும் சிறப்பானது.
 
நிகில் மற்றும் சாயிஷாவுக்கு எனது வாழ்த்துகள். இப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில், “‘ஹலோ காதல்’ படத்தின் கதையை முதலில் மலையாளத்தில் கேட்டேன். இயக்குநர் தமிழுக்கு வந்த பிறகு இப்படத்தில் இணைந்தேன்.

ஆர்யா சாருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வைஷ்ணவியுடன் இணைந்து நடித்த காட்சிகளிலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன்.
 
ஒளிப்பதிவாளர் ஜீவா சார் என்னை மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தொழில் நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி” என்றார்.

இயக்குநர் நிகில் முரளி பேசுகையில், “ஆர்யா சாரின் வீட்டிற்குச் சென்று கதையைப் பேசிய தருணமும், இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் சிறப்பானது.

படத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
 
ஜி.வி. பிரகாஷ், ஆர்யா, வைஷ்ணவி, ஜீவா சார், மோகன் சார், நௌஷத், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு மற்றும் சாயிஷா மேம் ஆகியோரின் திறமையும் ஒத்துழைப்பும் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம்.
 
இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “நீண்ட நாட்களாக ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால், சாயிஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு லைட்டான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தில் இணைந்தேன்.

‘உள்ளம் கேட்குமே’ படத்திற்குப் பிறகு ஜீவா சாரின் ஆசீர்வாதமும் இப்படத்தில் கிடைத்துள்ளது.
 
கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தபோது கிஷோர் சார் மூலமாக இப்படத்தின் கதையைக் கேட்டேன்.
 
மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இல்லாமல், இன்றைய பார்வையாளர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் வகையில் இயல்பாகவும் புத்துணர்ச்சியுடனும் கதை அமைந்திருந்தது.
 
ஜி.வி. பிரகாஷ், நிகிலா விமல், இயக்குநர் நிகில், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு, சதீஷ், ஷ்யாம், வெங்கட் சார் மற்றும் தயாரிப்பாளர்கள் கிரீஷ் மாத்ருபூதம், விக்னேஷ் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
 
படத்திற்குப் பலமாக இருக்கும் ஜீ குழுவினருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகர்கள் :

• ஆர்யா
• நிகிலா விமல்
• வைஷ்ணவி சைதன்யா
• முரளி ஷர்மா
• ஜெயபிரகாஷ்
• காளி வெங்கட்
• கருணாகரன்
• கராத்தே கார்த்தி
• சதீஷ்
• வினோதினி
• விஜே பப்பு
• முத்தமிழ்

குழு :
• இயக்குனர்: நிகில் முரளி
• கதை மற்றும் திரைக்கதை: சுனு ஏ.வி, ஜோதிஷ் எம்.
• கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்கள்: ஹலிதா ஷமீம்
• இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
• பாடல் வரிகள்: விவேக் , கார்த்திக் நேதா , விஷ்ணு எடவன், நீரஜ் மாதவ்
• ஒளிப்பதிவு: ஜீவா சங்கர்
• பதிப்பாசிரியர்: பினு நெப்போலியன்
• கலை இயக்கம்: ஏ.ஆர். மோகன்
• நடன அமைப்பு: எம். ஷெரிஃப்
• சண்டைக் காட்சி வடிவமைப்பு: ஸ்டன்ட் சில்வா
• ஆடை வடிவமைப்பு: நௌஷாத் அகமது
• ஒலி: எம்.ஆர். ராஜகிருஷ்ணன்
• மக்கள் தொடர்பு: ரியாஸ் K அகமது, பாரஸ் ரியாஸ்
• தயாரிப்பாளர்கள் / தயாரிப்பு: சயேஷா சைகல் , கிஷோர் டி.; தி ஷோ பீப்பிள், சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ்.

Arya’s Rom- com ‘Hello Kadhal’ Trailer Unveiled; Film Set for Worldwide Theatrical Release on December 4!

The trailer of actor

Arya’s upcoming romantic entertainer ‘Hello Kadhal’, directed by Nikhil Muraly, was unveiled at a grand event in Chennai on November 23, in the presence of the film’s cast and crew.Actor Arya’s upcoming film, Hello Kadhal, directed by Nikhil Muraly, is gearing up for a worldwide theatrical release on December 4. Promising to be a refreshing feel-good entertainer packed with romance, humour and heartwarming emotions, the film features Arya in the lead role, alongside Nikhila Vimal, Vaishnavi Chaitanya, Murali Sharma, Jayaprakash, Kaali Venkat, VJ Pappu, Vinodhini and Karunakaran in pivotal roles. With its narrative exploring the nuances of modern-day relationships and the beauty of love through the perspectives of today’s generation, the film promises an engaging and relatable cinematic experience. The music for the film has been composed by G.V. Prakash Kumar.

The much-awaited trailer of Hello Kadhal was unveiled at a grand pre- release event held in Chennai on November 23. The occasion witnessed the presence of music composer G.V. Prakash Kumar, actor Arya, director Nikhil Murali, actors Nikhila Vimal, Sathish, Karate Karthi, Yuvraj Ganesh, Sunil Karthik, VJ Pappu, Muthamizh, Vinodhini and several members of the film’s technical and creative teams, who shared their experiences of working on the project and expressed their excitement about its theatrical release.

Speaking at the event, music composer G.V. Prakash Kumar said, “Hello Kadhal is a very special film to me. My cinematic journey began alongside Jam, who has acted in and produced this film. We have shared a wonderful professional association and have worked together on several important films, including Madrasapattinam and Raja Rani. Directed by Nikhil, who has delivered successful films in Malayalam, Hello Kadhal has a beautiful and refreshing love story, much like Raja Rani. Arya, Nikhila and Vaishnavi have all delivered wonderful performances. I am also particularly happy to have RJ associated with this film. ‘Kannum Kannum’ is one of my personal favourites from the album, and the background score for the song is currently in progress. The film is arriving in theatres on December 4, and I request audiences to extend their love and support by watching it on the big screen.”

Actor Karate Karthi said, “This film is special to me for three reasons. Firstly, I would like to thank director Nikhil Muraly and the entire team for giving me an opportunity to portray a character from a rural background, complete with the distinctive Tenkasi dialect. Secondly, I have previously worked under stunt choreographer Stunt Silva Master in Chithirai Sevvaanam, and it was a wonderful experience to perform a stunt sequence under his direction once again. Thirdly, dance choreographer Sheriff Master gave me an opportunity to showcase my dancing skills. Arya sir has been a tremendous source of inspiration to me. He constantly shares valuable advice and tips, which I continue to follow. My heartfelt thanks to everyone who made this possible.”

Actor Yuvraj Ganesh said, “I sincerely thank director Nikhil bro for believing in my character and offering me this opportunity. I grew up watching Arya sir’s films, including Pattiyal, Arinthum Ariyamalum and Naan Kadavul. Getting an opportunity to share screen space with him today is truly a blessing in my acting journey. Although I did not get an opportunity to share scenes with Nikhila ma’am, working with Vaishnavi ma’am was a wonderful experience. My heartfelt thanks to the entire team for giving me this opportunity.”

Actor Sunil Karthik said, “This is my first experience speaking on a film event stage, and it is truly special. I have played a character named Arivu in this film. I would like to thank director Nikhil sir, Arya sir, the producers and the entire team for giving me this wonderful opportunity. I request everyone to watch Hello Kadhal in theatres when it releases on December 4 and extend their support.”

VJ Pappu said, “I honestly did not expect to be invited on stage to speak today. When I was young, I used to accompany my father on his morning jogging sessions, and I would often see Arya sir jogging and cycling. To have now reached a stage where I get to act in a film starring him, even in a small role, is a very happy and fulfilling moment for me. When I first shared this news at home, my father jokingly teased me. I strongly believe that something we genuinely aspire for in life will eventually come true someday. I thank the director, producer and everyone responsible for giving me this opportunity. I hope everyone watches and enjoys the film.”

Actor Muthamizh said, “I signed this film after working on Kudumbasthan. I met Nikhil sir following the recommendation of Sivaprakash, and that is how I became part of this project. Although I had previously worked with Jeeva sir, I never imagined that I would get an opportunity to act alongside Arya sir. Arya sir and Nikhila ma’am were extremely friendly and cheerful on the sets, which made it very comfortable for everyone to work together. I also spoke to Arya sir about Kudumbasthan during the shoot. He is just as charming and energetic as he was in films like Sarvam and Boss Engira Baskaran. In fact, I was inspired by his advice and went on to work on reducing my weight. I thank Nikhila ma’am, director Nikhil Murali and the entire team for this wonderful experience. I request everyone to support the film when it arrives in theatres on December 4.”

Actress Vinodhini said, “I am extremely grateful to the team for giving me this opportunity. It is a pleasure to be part of an Arya-starrer after a long time, and I have been sincerely praying for the film to become a huge success. My two children are big fans of Arya sir. When I mentioned this to him during the shoot, he immediately went out of his way to speak to them over a video call. That gesture made me incredibly happy. Arya sir continues to be such a warm and down-to-earth person despite his success, and it was wonderful to work with him again. My best wishes and heartfelt thanks to the entire team.”

Art Director A.R. Mohan said, “I have had the opportunity to work extensively on Santhanam sir’s films. When I first met Arya sir after being approached for this project, he remarked that I resembled writer Pon Parthiban! Since Hello Kadhal is a beautiful love story, we have put in considerable effort to create aesthetically pleasing sets, locations and interiors that complement the film’s mood. Kishore sir and Madan extended tremendous support throughout the process. Cinematographer Jeeva Shankar has captured every frame, song and visual beautifully. Director Nikhil’s screenplay, the meticulous planning and efforts of Siva and the art department, along with the excellent work of the choreographer, have all added immense value to the film. I believe this will be an engaging romantic entertainer that cinema lovers will thoroughly enjoy. My thanks to everyone involved.”

Stunt Director Stunt Silva said, “Although Hello Kadhal is predominantly a romantic film, I am grateful to Nikhil sir for giving me an opportunity to choreograph a stunt sequence, considering my close association with Arya sir. Many actors tend to become less particular about their fitness after achieving success. However, Arya sir, despite his playful and youthful personality, remains incredibly dedicated to maintaining his physique and transforming himself for every film. His circle of friends is equally wonderful. I thank Jeeva Shankar, Mohan sir, Nikhil sir and the entire team. G.V. Prakash sir is extremely busy balancing production, acting and music composition, and it was a pleasure working with this team. My best wishes to Hello Kadhal for a grand success on December 4.”

Costume Designer Naushad Ahmed said, “I have previously worked with Arya sir on Vettuvam, and our professional association continues through projects like Sarpatta 2. I sincerely thank Arya sir for this opportunity and Nikhil bro for being supportive throughout this journey. My heartfelt thanks also go to my entire team for their dedicated efforts.”

Editor Binu Napoleon said, “Hello Kadhal marks my debut in Tamil cinema, making this a dream-come-true moment for me. I am extremely grateful to director Nikhil, A.J.S.R. Kishore sir and Madhan for placing their trust in me and giving me this wonderful opportunity.”

Dance Choreographer M. Sheriff said, “It is always a pleasure to collaborate with Arya sir again. I have choreographed three songs in this film, including ‘Kannum Kannum’. Jeeva Shankar sir has captured every sequence beautifully. I am particularly grateful to the team for giving me the opportunity to create the introduction song on such a grand scale. My thanks to director Nikhil, G.V. Prakash sir, Selva Master, Arun, Madhan, Kishore sir, Nikhila, Shaam sir, Sathish sir, Abhishek and the entire team. Shooting in Puducherry was a refreshing and unique experience for me.”

Cinematographer Jeeva Sankar said, “Working on Hello Kadhal has been an extremely fulfilling experience. Through Jam, I finally got the opportunity to be part of the kind of positive, feel-good film I had been looking forward to for a long time. The friendship I developed during Ullam Ketkumae continues to remain special even today. I am also happy to have reunited with G.V. Prakash sir after Anandha Thandavam. Director Nikhil had a very clear understanding of the story and every visual detail, which made the entire process seamless. Producers Kishore and Jam extended complete cooperation and gave us the creative freedom to bring the film to life. I thank dance choreographer Sheriff, editor Binu, Selva Master, Naushad, art director Mohan and every member of the team. Shooting at the specially created locations in Puducherry was a unique experience. I am confident that the songs and emotionally engaging sequences will connect with audiences. I request our friends from the press and media to extend their wholehearted support to the film, which releases on December 4.”

Actor Sathish said, “Arya is a wonderful human being who genuinely cares for me. He is someone who immediately steps forward whenever anybody needs help. He gave me an opportunity to act in Ghajinikanth, and I have also played a role in bringing him and Sayyeshaa together. Our friendship goes all the way back to the days of Ullam Ketkumae. I would like to appreciate the talent of G.V. Prakash, Nikhila, Vinodhini ma’am and all the masters associated with this film. I can never forget the help G.V. Prakash extended to me during one of the most difficult phases of my life. I sincerely wish Hello Kadhal, releasing on December 4, a phenomenal success. I request the press and media fraternity to extend their support to the film.”

Dinesh Kumar, who travelled from Malaysia to attend the event, said, “It is a pleasure to be here from Malaysia. I thank Arya for inviting me and introducing me so warmly. I grew up watching his films, and he has always been a tremendous inspiration to me. I cherish my memories of the Malaysian release of ‘Mistakes’ and the promotional activities I undertook alongside Arya. He is an exceptionally hardworking person. What impressed me most was the dedication with which he worked to ensure that the film purchased by Denis did not suffer losses. I have travelled from Malaysia along with my wife, Vimala Perumal, to be part of the promotional activities for this film. I request our friends from the press and media to support Hello Kadhal and help make it a success.”

Actor Shaam said, “Hello Kadhal is a refreshing and beautifully made film. I am confident that both married audiences and those who are in love will connect with it. The work of Jeeva Shankar, dance choreographer Sheriff and G.V. Prakash deserves special appreciation. I am a huge fan of G.V. Prakash’s music, and I believe the songs from this film will become a big hit. My friendship with Arya goes back to the days of Ullam Ketkumae. His simplicity and willingness to help others are truly admirable. Producer Kishore sir, who has been a strong guiding force behind the project, also deserves appreciation. My best wishes to Nikhil and Sayyeshaa. I wish the film a massive blockbuster success.”

Actress Nikhila Vimal said, “I first heard the story of Hello Kadhal in Malayalam. When director Nikhil decided to make the film in Tamil, I became part of the project. It was an extremely exciting and enjoyable experience working with Arya sir for the first time. I also had a wonderful time sharing scenes with Vaishnavi. Cinematographer Jeeva sir has presented me beautifully on screen. I would like to thank all the technicians, assistant directors and every member of the team for their support and cooperation throughout the shoot.”

Director Nikhil Murali said, “The moment I visited Arya sir’s home to narrate the story and the entire experience of working on this film have been truly special to me. I would like to thank everyone who has supported me from the very beginning of this project. The contributions and immense talent of G.V. Prakash, Arya, Vaishnavi, Jeeva sir, Mohan sir, Naushad, dance choreographer Sheriff, stunt choreographer Selva Master, editor Binu and Sayyeshaa ma’am have been major strengths of this film. I am confident that audiences will enjoy Hello Kadhal. My sincere thanks to everyone who believed in this project and made it possible.”

Actor Arya said, “Having spent a considerable amount of time working on action-oriented films, I wanted to explore something lighter and more refreshing, especially as it was Sayyeshaa’s wish to see me in a film of this kind. That is how I came on board Hello Kadhal. After Ullam Ketkumae, it was wonderful to receive Jeeva sir’s blessings once again through this film. I was shooting in Kerala when Kishore sir narrated the story to me. What immediately appealed to me was its natural and refreshing approach to relationships. The emotions were not exaggerated, and the story felt closely connected to the lives of today’s audiences. It was a narrative that felt both relatable and entertaining.

“I would like to appreciate the contributions of G.V. Prakash, Nikhila Vimal, director Nikhil, dance choreographer Sheriff, stunt choreographer Selva Master, editor Binu, Sathish, Shyam, Venkat sir and our producers Girish Mathrubootham and Vignesh. The Zee team has also been a tremendous strength to this film, and I thank everyone who has been part of this journey. I sincerely request our friends from the press and media to extend their full support to Hello Kadhal, which will be arriving in theatres worldwide on December 4.”

With its promising ensemble cast, refreshing romantic narrative, soulful music by G.V. Prakash Kumar and a talented technical team, Hello Kadhal is gearing up to offer audiences a delightful theatrical experience. The film is all set for a worldwide theatrical release on December 4.

CAST
– Arya
– Nikhila Vimal
– Vaishnavi Chaitanya
– Murali Sharma
– Jayaprakash
– Kaali Venkat
– Karunakaran
– VJ Pappu
– Vinodhini
– Karate Karthi
– Yuvaraj Ganesh

TECHNICAL CREW

 
– Director: Nikhil Muraly
– Story & Screenplay: Sunu A.V. and Jothish M.
– Additional Screenplay & Tamil Dialogues: Halitha Shameem
– Music: G.V. Prakash Kumar
– Lyrics: Vivek, Karthik Netha, Vishnu Edavan and Neeraj Madhav
– Cinematography: Jeeva Shankar
– Editing: Binu Napoleon
– Art Direction: A.R. Mohan
– Dance Choreography: M. Sheriff
– Stunt Choreography: Stunt Silva
– Costume Design: Naushad Ahmed
– Sound: M.R. Rajakrishnan
– Public Relations: Riaz K Ahmed and Paras Riyaz
– Producers: Sayyeshaa and Kishore T.
– Production Houses: The Show People and Silver Grain Pictures.
Our Score