full screen background image

தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த ‘சீன்’ –  ரசிகர்களுக்கு சூர்யாவின் நன்றி!

தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த ‘சீன்’ –  ரசிகர்களுக்கு சூர்யாவின் நன்றி!

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

இதனை தொடர்ந்து சமீபத்தில் நவம்பர் ஆறாம் தேதி தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடித்த ‘சீன்’ திரைப்படமும் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

இதன் மூலம் மூன்று வெற்றிகளை ஹாட்ரிக் வெற்றியை சூர்யாவும் அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்துள்ளது எனவும் அறிவித்துள்ளனர்..

இந்த நிலையில் இந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து இருக்கும் சூர்யா தனது அன்பான ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்..

“அன்பான ஃபேன்ஸ், தம்பி – தங்கைகள், தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் எனது மரியாதையும் நன்றிகளும்.

‘சீன்’ படத்தைத் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து, கொண்டாடி, அலசி ஆராய்ந்து, டீகோட் செய்து பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள்.

ஒரு படம் ஓடினால் அதில் நடித்தவர்கள், படம் எடுத்தவர்கள், படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷப்படுவார்கள்.

ஆனால், எங்களைவிட நீங்கள் அதிகம் சந்தோஷப்பட்டிருக்கிறீர்கள்.

இந்த வெற்றிக்காக உங்களுக்கு எப்படி வார்த்தைகளில் நன்றி சொல்ல முடியும் எனத் தெரியவில்லை.

எனது மனமார்ந்த நன்றிகளையும், மரியாதை களையும் படக் குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து மேலும் சிறப்பான படத்துடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Our Score