full screen background image

மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர் வெளியானது

மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர் வெளியானது

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் – Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் கே .கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார்.

ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார்.

அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

“சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னைவரைக்கும், ஒரு பொருள் தொலையும்போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்…” என தொடங்கும் இந்த டீசர்,  

2020-ம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது.

காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும்…. இந்த டீசர் வெளிப்படுத்துகிறது.

அத்துடன் இதன் பின்னணி இசை, காட்சி அமைப்பு  என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Our Score