இந்தப் படத்தில் ‘முருகா’ அசோக், யுகன், திருமாறன் மோகன்தாஸ், அர்ஜுனா துரைசாமி, நிஷா இஸ்மத், சங்கவி, ஒய். ஜி. மகேந்திரன், டாக்டர் அரவிந்தராஜ், கடலூர் சிவா மற்றும் பலரும் நடித்தூள்ளனர்.
இசை: ஷேக் காதர், ஒளிப்பதிவு: வெங்கடாசலம், சிங்காரவேலன், படத்தொகுப்பு: கார்த்தி பாண்டியன்.
இந்தப் படம் ஒரு மர்டர் சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த திரைப்படம்.
இப்போ ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல “ஒரு கொலை நடந்துருச்சு, நான்தான் அந்தக் கொலையை செஞ்சேன்…” அப்படின்னு சொல்லி ஒருத்தர் சரண்டரானால், “அப்பாடா சந்தோஷம்” அப்படின்னு சொல்லி ஆளைக் கூப்பிட்டு உட்கார வச்சு, காபி, டீ, சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து, அவனை நல்லவிதமா மரியாதையா நடத்தி, “கேஸை எவ்வளவு சீக்கிரமா முடிக்கணுமோ… அவ்ளோ சீ்க்கிரம் முடிச்சு பைலை குளோஸ் செஞ்சிருவோம்..” அப்படின்னுதான் போலீஸ் நினைப்பாங்க.
ஆனால், அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்து, இவன் இதைக் கொலை செய்யாமல் இருந்திருக்கலாமே.. அப்படின்னு நினைச்சு வழக்கை விசாரிக்க ஆரம்பித்தால்… என்னென்ன நடக்கும் அப்படிங்கறதுக்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். அதுதான் இந்தப் படத்தின் கதைக் களம்.
படத்தின் துவக்கத்திலேயே தன்னுடைய காதலியையும், தன்னை கொல்ல வந்த ஒரு ரவுடியையும் கொலை பண்ணிட்டேன்னு சொல்லி படத்தின் ஹீரோவான ‘முருகா’ அசோக் போலீஸ் ஸ்டேஷன்ல சரண்டர் ஆகிறார்.
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் யுகன் இந்த வழக்கை விசாரிக்கிறார். அவருக்கு ஒரு இடத்தில் நெருடல் வருது. அது எப்படி இவன் ஒரு பக்கம் கடற்கரையில ரவுடியைக் கொலை பண்ணிட்டு, வீட்டுக்குப் போய் காதலியையும் கொலை பண்ணிட்டு வந்திருப்பான்? இதுக்கு காதலியோட அம்மாவும் அப்பாவும் பதில் சொல்லாம இருக்காங்களே… அப்படின்னு யோசிக்கிறாரு. அதுக்கப்புறம் விசாரிக்க ஆரம்பிக்கிறாரு.
விசாரிக்க ஆரம்பிக்க… ஆரம்பிக்க இந்த வழக்கில் இருக்கும் சின்னச் சின்ன மிஸ்டேக்குகள் எல்லாம் வெளியில வருது. இதன் பின்னால் அசோக் இந்த கொலையை செஞ்சிருக்கமாட்டான் அப்படிங்கிற எண்ணம் அந்த இன்ஸ்பெக்டருக்கு வருது.
அசோக் பத்தி விசாரிக்கப் போனால், அவரு ஏற்கனவே மனநோயாளியா இருக்கார் என்பது இன்ஸ்பெக்டருக்கு தெரிய வருகிறது. எந்த மாதிரியான மன நோயாளி என்றால், யாராவது ஒருத்தர் அசோக்கிடம்போய், “நீதான அங்க திருடுன..? நீதான அங்க கொள்ளையடிச்ச” அப்படின்னு நாலஞ்சு தடவை சொன்னாலே போதும், அவரும் “ஆமாம், நான்தான் செஞ்சேன்” அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிடுவாரு. அப்படியொரு மனநிலை பிறழ்வு.
இப்படி ஒரு மனநிலை கொண்டவருக்கு அரவிந்தராஜ் என்ற மருத்துவர்தான் சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருக்காரு. இப்ப அந்த டாக்டர் அரவிந்தராஜ்கிட்டயும் விசாரிக்கிறாரு இன்ஸ்பெக்டர். அவரும் இதே கதையைத்தான் சொல்றாரு. கூடவே, “அசோக் இதுக்கு முன்னாடி கும்பகோணத்துலயும் ஒரு கொலை பண்ணிட்டு வந்திருக்கான்” என்கிறார் அரவிந்த்ராஜ். இப்ப போலீஸ் கும்பகோணத்துக்கும் போய் விசாரிக்கிறாங்க. அதுக்கப்புறம் போகப் போக உண்மையான குற்றவாளி அசோக் இல்லை அப்படிங்கறது அவங்களுக்குத் தெரியுது.
அப்ப.. யார்தான் உண்மையான குற்றவாளி? அந்தக் கொலைகளைச் செய்தது யார்? இதை எப்படி இன்ஸ்பெக்டர் யுகன் கண்டுபிடிக்கிறார் அப்படிங்கிறதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
‘முருகா’ அசோக் ரொம்ப சின்ன பட்ஜெட்ல அப்பப்போ ஹீரோவா நடிச்சு தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக்கிட்டு இருக்காரு. இந்தப் படத்துலயும் அவருடைய கேரக்டருக்கு ஏற்ற, தன்னுடைய நடிப்பை மட்டும் காண்பிச்சு ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு.
அவரு ஒரு மனநோயாளி அப்படிங்கிறது வெளியில தெரியாத அளவுக்கு இயல்பா இருக்கிற மாதிரியான நடிப்பைக் காண்பிச்சிருக்காரு. அதுலயே சின்னச் சில ரொமான்ஸ் காட்சிகளில கொஞ்சம் கவனிக்க வச்சிருக்காரு.
இன்ஸ்பெக்டரா நடித்திருக்கும் யுகன் புதுமுக நடிகர். தம்மால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்காரு.
இயக்குநரின் அதிகப்படியான அவசரத்தனமான, திரைக்கதையில் உடனுக்குடன் காட்சிகள் மாறிக்கிட்டே போவதால், அவருடைய நடிப்பும் மிடுக்கும், பேச்சும் ஏதோ ஒரு செயற்கைத்தனமா வந்து அமைஞ்சிருச்சு.
“அதை பாருங்க, இதை பாருங்க” அப்படின்னு சொல்றதெல்லாமே சாதாரணமான ஒரு பேச்சு. ஏன்னா போலீஸ் ஆபீஸர், இன்ஸ்பெக்டர் இப்படித்தான் பேசுறாங்கன்னு சொல்லி எல்லா சினிமாவுலயும் இதைத்தான் காட்டிக்கிட்டு இருக்காங்க. அதையேதான் இவரும் காட்டுறாரு, அவ்வளவுதான், வேற ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஆனால், அதுல இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சிருக்கலாம்.
ஹீரோயினா நடிச்ச மூணு பேரு… நிஷா, சங்கவி, சீமோ அத்வானி… அந்த மூணு பேருமே தங்களுடைய கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காண்பிச்சிருக்காங்க. அதுல பூஜாவா நடிச்ச நிஷாவுக்குதான் கொஞ்சம் அதிகப்படியான காட்சிகள். அவங்களும் ரொம்ப இயல்பாகவே நடிச்சிருக்காங்க.
அதுலயும் ஹீரோ ’20 நாட்களில் ஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி’ன்னு புத்தகம் படிக்கிறாரு; அதே மாதிரி ஹீரோயின் வந்து ’20 நாட்களில் தமிழ் கற்றுக் கொள்வது எப்படி’ன்னு அவங்க படிக்கிறாங்க. அது ஒரு சுவாரசியமான காட்சி. அது ஒன்றுதான் இந்தப் படத்துல ரசிக்கக் கூடியதா இருந்தது.
அதற்குப் பிறகு திரைக்கதைக்குள் போகப் போக ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வந்து, காட்சிகள் உடனுக்குடன் ஜம்ப் அடுத்தடுத்த சீன்களுக்கு மாறுவதை நம்ப முடியவில்லை.
“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கிட்டீங்களா?” என்று கேட்டால் “வந்துருச்சு சார்”னு அடுத்த சீன்லயே கொண்டுவந்து கொடுக்குறாங்க. அதற்கடுத்த சீன்லயே தடய அறிவியல் அறிக்கையையும் கொண்டுவந்து கொடுக்கிறாங்க.
இது மாதிரி ஒவ்வொரு காட்சிக்கும் கொஞ்சம் இடைவெளியுடன் ஒரு சினிமா மெத்தட், சினிமா மொழி இருந்திருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் எதையுமே செய்யாமல் அடுத்தடுத்த சீன்லயே போஸ்ட்மார்ட்டத்தையே நடத்திக் கொடுக்குறாங்க.. இப்படிலாம் திரைக்கதையில் காட்சிகளை அசுர வேகத்தில் வைத்து படத்தை வேகமா நகர்த்தியிருக்காரு.
சரி இயக்குநர் படத்தை சீக்கிரமா முடிக்கணும்ன்னு நினைக்கிறாரு போல இருக்குன்னு நாமளே நினைச்சுக்க வேண்டி இருக்கு. கொஞ்சம் இது மாதிரியான தவறுகளையெல்லாம் சரி செய்திருக்கலாம்.
கிளைமாக்ஸில் உண்மையான குற்றவாளி இந்தக் கொலைகளை எப்படி, எதற்காக பண்ணாரு அப்படிங்கறத கொஞ்சம் குழப்பமாவே கொண்டுபோய் குழப்பமாவே முடிச்சிருக்காரு. அதைக் கொஞ்சம் நல்ல தெளிவான பார்வையோட சொல்லியிருக்கலாம்.
அரவிந்தராஜ் அப்படிங்கிற அந்த மருத்துவரைச் சுற்றியிருக்கின்ற அந்தக் கதையும் ஒரு சோகக் கதைதான். அந்தக் கதைக்குள்ள ஒரு அழுத்தம் கொடுத்து செய்திருந்தா கிளைமாக்ஸ்கூட கவனிக்கப்பட்டிருக்கும்.
மத்தபடி இந்தப் படத்துல தொழில்நுட்பத்துல பார்த்தீங்கன்னா, ஒளிப்பதிவாளர் பட்ஜெட் படம் அப்படிங்கறதுனால தன்னால் முடிந்த அளவுக்கான ஒளிப்பதிவை கொடுத்திருக்காரு.
ஷேக் காதரோட இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை பரவாயில்லை அப்படிங்கிற ரகம்.
படத்தோட எடிட்டரும் எடுத்துட்டு வந்து கொட்டுனதையெல்லாம் அழகா சேர்த்திருக்காரு. நான்-லீனியர் முறையில் கொஞ்சம் கதை பின்னோக்கி நகர்ந்து அப்புறம் முன்னோக்கி நகர்ந்து கொஞ்சம் விட்டுவிட்டு போறதையும்கூட சுவாரசியமான முறையில் அழகாக கட் பண்ணிக் கொடுத்திருக்காரு. அந்த வகையில் படத் தொகுப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் இந்தத் திரைப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்தான். ஒரு முறை பார்க்கலாம் என்ற வகையில்தான் எடுக்கப்பட்டிருக்கு. “இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்” அப்படிங்கிறது நம்முடைய கருத்து.
RATING : 3/ 5









