full screen background image

Don’t Trouble The Trouble – சினிமா விமர்சனம்

Don’t Trouble The Trouble – சினிமா விமர்சனம்
நடிகர், நடிகையர் :
 
ஃபஹத் ஃபாசில் – சூரி
சாரா பாலேகர்– திவ்யா
மகேஷ் மஞ்ச்ரேகர் – அஸ்லம்
சௌரப் சச்தேவா – பிரதாப்
வெங்கடேஷ் காகுமானு – மல்லேஷ்
சுப்பராஜு – கிருஷ்ணா
திவ்யா பிள்ளை – பல்லவி
எஸ். எஸ்.  ஷஷாங்க்   – சஞ்சய்

தொழில்நுட்பக் குழு:

வழங்குபவர் – எஸ். எஸ். ராஜமௌலி
தயாரிப்பாளர்கள் –ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா
எழுத்து & இயக்கம் – ஷஷாங்க் யேலேட்டி
தயாரிப்பு நிறுவனங்கள் – ஆர்கா மீடியா வொர்க்ஸ், ஷோயிங் பிசினஸ்
இசை – கால பைரவா
ஒளிப்பதிவு – பிராட் பிரான்சிஸ் ACS
ஆடை வடிவமைப்பு – ரமா ராஜமௌலி
படத்தொகுப்பு – பிரவீன் ஆண்டனி
திரைக்கதை மேம்பாடு – எஸ். எஸ். காஞ்சி
இணை எழுத்தாளர் – ஹம்சா அலி
கலை இயக்குநர்கள் – மோகன் நாத் பிங்கி, சந்தீப் சுவர்ணா
பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்

இந்தப் படத்தில் ஃபஹத் பாசில். முதல் முறையா தெலுங்குல தனி ஹீரோவா நடிச்சிருக்காரு.  இதனால் இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்துலேயும் டப் பண்ணி வெளியிட்டுள்ளனர்.

​”பிரச்சனைக்கே, பிரச்சனை குடுக்காதீங்கடா ராசா” அப்படிங்கிற மாதிரியான படம் இது. அதனால்தான் இப்படியொரு தலைப்பு. இதுவொரு ஃபேண்டஸி படம். ஃபேண்டஸிய முடிந்த அளவுக்கு சின்னக் குழந்தைகள் ரசிக்கக் கூடிய அளவுக்கு கொடுத்திருக்காங்க.

​படத்தோட கதை ஹைதராபாத்லதான் நடக்குது. அப்பா, அம்மா இல்லாத ஒரு அனாதை ஹீரோ பகத் பாசில். பணம், பணம்னு அலையறவரு. ஆம்புலன்ஸ் டிரைவரா இருக்காரு. ஆம்புலன்ஸ்ல 20 நிமிஷத்துல ஆஸ்பத்திரில கொண்டுபோய் சேர்த்தா அவருக்கு பணம் தரேன்னு டாக்டர் சொல்லுவாங்க. அதே மாதிரி கொண்டுபோய் சேர்த்துட்டு பணத்தை வாங்கிக்குவாரு. இடையில எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும், அதை ‘ஆம்புலன்ஸ்’ அப்படிங்கிற ஒரு வார்த்தையை வச்சு தப்பிக்கிறதுல அவரு மன்னன்.

​சுறுசுறுப்பா, சீக்கிரமா செயல்படுவாரு; ஆனா அதே சமயம் காசுக்காக என்ன வேணாலும் செய்யக் கூடியவர். ஹைதராபாத்ல சார்மினார் பகுதியில மிகப் பெரிய தாதாவாக இருக்கிறார் மகேஷ் மஞ்சுரேக்கர். அவர்கிட்ட ஒரு சின்ன பிரச்சனை பண்றாரு பகத். அதனால “ரெண்டு நாள்ல ₹25 லட்சம் நீ குடுக்கலைன்னா, இந்த ஊர்லயே இருக்க மாட்ட; உன்ன கொலை பண்ணிடுவேன்”னு மிரட்டுறாரு தாதா மகேஷ்.

​ரெண்டு நாளைக்குள்ள ₹25 லட்சத்தை எப்படி சம்பாதிப்பதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்காரு பகத். அந்த நேரத்துலதான் திவ்யா அப்படிங்கிற சாரா பலேக்கர் பகத்தின் கண்ணுக்குப் படுறாரு. அந்தப் பொண்ணைப் பார்த்தவுடனே மிகப் பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணா இருக்கறதுனால, இந்தப் பொண்ணைக் கடத்திட்டுப் போய் காசு சம்பாதிக்கலாமேன்னு நினைத்து திவ்யாவை தந்திரமா தன்னோட கார்ல கூட்டிட்டுப் போறாரு. திவ்யாகூட அவளோட செல்ல நாயான ‘ஸ்கூபி’யும் வருகிறது.

​திவ்யாவோட அப்பாவுக்கு போன் பண்ணி ஒன்றரைக் கோடி கேட்கிறார் பகத். அந்தப் பணத்தை கைப்பற்ற நினைக்கும்போது பல பிரச்சனைகள் பகத்துக்கு ஏற்படுது. அந்தப் பணத்தை எடுக்க முடியாத அளவுக்குப் பிரச்சனைகள் வரிசை கட்டி வருகிறது. 

​கடைசியா பணத்தை எடுத்த பின்புதான் அவருக்கு திவ்யா யார் என்பதே தெரிகிறது. அது ஒரு சஸ்பென்ஸ்.

அது என்ன சஸ்பென்ஸ்? அதுக்கப்புறம் திவ்யாவுக்கு என்ன ஆனது? பகத் பணத்துடன் தப்பித்தாரா? இல்லையா? அப்படிங்கறதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

பேண்டஸி படத்துக்கு ஏற்ற மாதிரியான எலிமெண்ட்ஸ் எப்படி இருக்குமோ, அதே அளவுக்கு இந்தப் படத்துலயும் செஞ்சிருக்காங்க. படத்துல ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, படத்துடைய நீளம்தான். அது ரொம்பவே சோதிக்குது. கிட்டத்தட்ட 3 மணி நேரம்! அந்த அளவுக்கெல்லாம் நமக்குத் தேவையே இல்லை; குறைச்சிருக்கலாம்.

​ஃபஹத் பாசிலின் நடிப்பு பிரமாதம். அதனாலதான் ‘நடிப்பு அரக்கன்’னே சொல்லுவாங்க. எந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பைக் கொட்ட முடியுமோ, அந்த அளவுக்குக் கொட்டியிருக்காரு மனுஷன். அனைத்துக் காட்சிகளிலும் அசால்ட் சேது மாதிரி அசால்ட்டா நடிக்கிறாரு. பணத்தை வாங்குறது, ஏமாத்துறது, திருடுறது.. அந்த காட்சிகளிலெல்லாம் அசால்ட். அதுக்கப்புறம் அந்த குழந்தைகிட்ட மாட்டுன பின்னாடி, அதனுடைய கோபம், ஆத்திரம் எல்லாத்தையும் அடக்கிகிட்டு பேசணும், பணத்தைச் சம்பாதிக்கணும், கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகணும், குழைவா பேசணும்… அந்த மாதிரியான காட்சிகளில் எந்த அளவுக்குத் தன்னுடைய நடிப்பைக் குழைச்சுக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு அழகா செஞ்சிருக்காரு மனுஷன்.

​கடைசி 20 நிமிஷத்துல கண்ணுக்குள்ளேயே நிக்கிறாரு. அந்த அளவுக்கு தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்ந்துட்டாரு ஃபஹத் பாசில். கடைசி 20 நிமிஷம் பயங்கர எமோஷன்ஸ் நிறைந்தது அந்தக் காட்சி. இந்தக் காட்சியை கொஞ்சம் முன்னாடியே வரவழைச்சிருந்தா, டயர்ட்னஸே இல்லாமல் நாம் இன்னும் ரசித்துப் பார்த்திருக்கலாம்,

திவ்யாவாக நடித்திருக்கும் சாரா பலேக்கர் பிரமாதமா பண்ணியிருக்கு. அந்தப் பொண்ணு க்ளோஸ்-அப் ஷாட்ல எல்லாம் அவ்வளவு அழகா இருக்கு. அதோட டயலாக் டெலிவரி, குழந்தைத்தனமான பேச்சு, ஃபஹத் பாசில் என்ன சொன்னாலும் நம்புறது, கடைசில அந்தப் பொண்ணோட நிலைமை என்னன்னு அதுக்கே தெரியும்போது அது பரிதாபமா பார்க்கிறது… அதெல்லாம் ரொம்ப பாவமான ஒரு நடிப்பு! அந்த எமோஷன்ஸை அவ்வளவு அழகா அந்தப் பொண்ணு கொடுத்திருக்கு; கண்டிப்பா பாராட்டணும். அந்தப் பிள்ளைக்கு கோடி நன்றிகள்! 

வில்லனா நடித்திருக்கும் மகேஷ் மஞ்சுரேக்கர். பழம்பெரும் நடிகர், ஆனாலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் அந்த கேரக்டரைக் கரெக்டா பண்ணியிருக்காரு. அப்புறம் திவ்யாவின் அம்மா, அப்பாவா நடிச்சவங்க, தாய் மாமாவா நடித்தவர், இன்ஸ்பெக்டரா நடித்தவர், அவருடைய நண்பனா நடித்தவர் அனைவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

பகத்தின் நண்பராக நடித்தவர் பகத்துக்காக தன்னுடைய ஒரே ஒரு சொத்தாக இருந்த தன் நிலத்தை வித்து ₹25 லட்சம் கொண்டு வந்து குடுக்கும் காட்சியில் சட்டென்று நம் மனதைத் தொட்டுவிட்டார். எவ்வளவு பெரிய நட்பு! எவ்வளவு பெரிய நண்பன்! அதை அவர் சொல்லும்போது அவர் நடிப்பைப் பார்க்கணுமே.. அவ்வளவு சந்தோஷம் அவர் முகத்தில்.! ஆனால் அதைக் கேட்டுவிட்டு தன்னுடைய குற்ற உணர்வால் அழுகிறார் ஃபஹத் பாசில். அது ஒரு அற்புதமான எமோஷன்ஸ் காட்சி. காருக்குள்ள உக்காந்து அவங்க பேசுறது. ரொம்ப அழகான காட்சி.

​ஒளிப்பதிவு அபாரம்தான். ஹைதராபாத் நகரின் சந்து, இண்டு இடுக்கெல்லாம் சேர்ந்து தேடித் தேடிப் போயி படம் பிடித்திருக்கிறார். அதுலேயும் அந்த ஆம்புலன்ஸ் வேனை வச்சு விரட்டிட்டுப் போற காட்சிகள் எல்லாம் பிரமாதம். அப்படி ஒரு சேஸிங்கை, ஒளிப்பதிவாளர் சிறப்பா பதிவு பண்ணியிருக்காரு, ஹைதராபாத் சார்மினார் பகுதியையே இந்த அளவுக்கு வேற எந்தப் படத்துலயும் நம்ம பார்க்கல.

இசையமைப்பாளர் கால பைரவாவின் இசையில் பாடல்களைத் தவிர பின்னணி இசை பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒரு பரபரப்பான… ஒரு சில இடங்களிலும் பரபரப்பைக் கூட்டுற அளவுக்கு அழகான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். காமெடியான சில காட்சிகளிலும் அந்தப் பின்னணி இசை நம்மை லைட்டா சிரிக்க வைத்துள்ளது.

​சண்டைக் காட்சிகளையும் கொஞ்சம் காமெடியாவும் எடுத்திருக்காங்க. அதே மாதிரி ஃபேண்டஸி படம் அப்படிங்கிறதுனால அது எப்படி இருக்குமோ, மாயாஜாலக் காட்சிகள் எப்படி இருக்குமோ, அதே அளவுக்கு கொஞ்சம் ரசிக்கக் கூடிய அளவுக்கும்… ரசிக்கிற அளவுக்குக் கொடுத்திருக்கிறார்கள். 

படத் தொகுப்பாளர் ​பிரவீன் ஆண்டனி இன்னும் நிறைய காட்சிகளை சுருக்கி 2 மணி 25 நிமிஷத்துக்கு கொடுத்திருந்தால், இந்தப் படத்தை இன்னும் அழகாக நாம் ரசித்திருக்கலாம்.

​ஃபஹத் பாசிலோட அந்த கேரக்டர் ஸ்கெட்ச்… பணம், பணம்னு அலையறவன் கடைசியா ஒரு மனிதத்தைப் பார்த்து, குழந்தைகளைப் பார்த்து, குடும்பத்தைப் பார்த்து, அந்த சந்தோஷத்தைப் பார்த்து, குழந்தைகளிடம் இருக்கின்ற அந்த அன்பைப் பார்த்து கடைசியில மனம் திருந்துகிற அந்தக் காட்சியெல்லாம் ரொம்ப அழகு. அதை இன்னும் கொஞ்சம் வசனத்தில் அழுத்திச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

​இயக்குநர் சொல்ல வந்தது: பணம் மட்டுமே முக்கியமல்ல, அது மட்டுமே வாழ்க்கை அல்ல; அதையும் தாண்டி ஒண்ணு இருக்கு. அதையும் புரிந்துகொண்டால் பணம் இல்லாமலேயே நிம்மதியா வாழலாம் அப்படின்னு அவர் சொல்லியிருக்காரு. இதை இன்னும் கொஞ்சம் புரிவது மாதிரி சொல்லியிருக்கணும்.

கிளைமாக்ஸ் அந்த எமோஷன்ஸை எல்லாம் கரெக்ட்டா கச்சிதமா கொண்டு வந்திருக்காங்க. அந்தக் கிளைமாக்ஸ் காட்சி சில லாஜிக் எல்லை மீறலாகவே இருந்தாலும் நம்ம ரசிக்கிற மாதிரி கொண்டுவந்து, கடைசியா நம்ம ‘அச்சச்சோ’ன்னு உச்சி கொட்டுகிற அளவுக்கு ஒரு ட்விஸ்ட் ஒன்னு வச்சிருக்காங்க பாருங்க… ரொம்ப அழகான ட்விஸ்ட்! எதிர்பார்க்கவே இல்லை. நம் மனசை கலங்கடித்த மாதிரியான ஒரு காட்சி அமைப்பு. அந்த வகையில் இந்த இயக்குநருக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுகள்!

​ஒரு நல்லதொரு திரைப்படம்தான். நீளமான திரைக்கதையினால், உருவாகியிருந்தாலும், இந்தப் படம் நிச்சயமாகப் பார்க்கக் கூடிய வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான திரைப்படம்தான். சிறந்த நடிப்பு, சிறந்த கதை, திரைக்கதையில் ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

அவசியம் தியேட்டரில் பாருங்கள்.

RATING  : 3.5 / 5

 

Our Score