full screen background image

அனிருத் வெளியிட்ட ‘அன்னக்கிளியே’ மியூசிக் ஆல்பம்!

அனிருத் வெளியிட்ட ‘அன்னக்கிளியே’ மியூசிக் ஆல்பம்!

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்.

சுயாதீன இசை கலைஞர்களின் முயற்சியில் மியூசிக் வீடியோ ஆல்பங்கள் வெளியாகி இசை ரசிகர்களின் பாராட்டை பெறுவதுடன் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்து வருகிறது.

அந்த வகையில் இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை அனிருத்தின் இசை நிறுவனமான அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் ( Albuquerque Records) சார்பில் வெளியிட்டு, வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

இசைக் கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே நீ வரும் வழியே தள்ளாடிப் போகுதே மனமே…’ எனத் தொடங்கும் இண்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் தீக்ஷிதா எழுதி பாடியிருக்கிறார். இவருடன் இசையமைப்பாளர் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடியிருக்கிறார்.

இந்த பாடலுக்காக நடிகர் பவன் அலெக்ஸ் மற்றும் நடிகை பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் பாடலுக்கான வீடியோவில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் பாடலுக்கான சூழலை நேர்த்தியாக விவரித்திருப்பதுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.

மேலும் இந்தப் பாடலில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்று பாடலின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.

இந்தப் பாடலுக்கான வீடியோவை விக்கி பப் இயக்க, ஜே சரோலா ஒளிப்பதிவு செய்ய, தீஜோ பரத்வாஜ் தயாரித்திருக்கிறார்.

இந்தப் பாடலை அனிருத் அவருடைய பிரத்யேக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அனிருத் – அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் – ஸ்மித் ஆஷர் கூட்டணியில் உருவான ‘ அன்னக்கிளியே’ இண்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் இசை ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இணையவாசிகளின் வரவேற்பை பெற்று இருக்கிறது.

அடர்ந்த வனம் – கழுகின் கூரிய பார்வை – தனியாக தவிக்கும் இளைஞன் – பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிக்கு அருகே சிறிய குன்றில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் வன தேவதை – பார்த்தவுடன் கண்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் காதல் – வனவாசிகளின் வில்லாளான எதிர்ப்பு – தப்பித்து ஓடுதல் – உயர்ந்த பாறை மீதிலிருந்து காதலுடன் காதலர்கள் குதிப்பது – ஆழமான நீர் நிலைக்குள் ஒன்றிணைவது- சங்க கால தமிழர் மரபில் போற்றப்பட்ட யாழி எனும் விலங்கின் மீது அமர்ந்து தப்பிப்பது.. வானவெளியில் மகிழ்ச்சியுடன் பறப்பது – என அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கான காணொளி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.‌

மெல்லிசை- காதல் உணர்வுள்ள பாடல் வரிகள்- காந்த குரல்- என பல சிறப்பம்சங்கள் இந்த மியூசிக் வீடியோவில் இடம் பிடித்திருப்பதாலும்.. ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக இணையதளத்தில் வெளியாகி இருப்பதாலும்.. இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே தொன்மையான ஆலயங்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள ‘யாழி’ எனும் பறவை மற்றும் விலங்கு இனத்தைச் சார்ந்த மிருகத்தை,

இயக்குநர் விக்கி பப் தலைமையிலான குழுவினர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தாமல், முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் ஆறு மாத காலம் கடுமையாக உழைத்து,

இதனை இன்றைய ஜென் ஸீ கிட்ஸ்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் யாழியை உருவாக்கி, அதனை வானவெளியில் பறக்கச் செய்திருப்பது புதுமையான முயற்சி என திரையுலக கலைஞர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதுவே இந்த மியூசிக் வீடியோவின் பிரத்யேக சிறப்பம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Watch : https://youtu.be/QTLiVG2ln-k?si=hZuJcDh0ytg-NAXW

‘Annakkiliye’ Music Video Album, Created by Musician Smith Asher, Released by Anirudh’s Albuquerque Records.

Independent musicians continue to make their mark with music video albums that are winning appreciation from music lovers and garnering millions of digital views. Adding to this growing trend, the music video album ‘Annakkiliye’, created by musician Smith Asher, has been released by Albuquerque Records, the music label founded by music sensation Anirudh, who has also extended his wishes to the team.

The indie musical video album opens with the soulful line, “Annakkiliye Nee Varum Vazhiye Thallaadi Poguthe Maname…”. The song has been written and sung by lyricist Deekshitha, who has also collaborated with composer Smith Asher, who lends his voice to the track. The music video features actors Pawan Alex and Pragathi Srivatsava in the lead roles.

The visuals beautifully capture and complement the mood and atmosphere of the song, creating an engaging experience for viewers. The music video also features extensive VFX work, elevating its visual quality to an international standard.

The video has been directed by Viky Pup, with Jay Charola handling the cinematography and Thejo Bharathwaj serving as the producer. Anirudh has released the song on his official YouTube channel.

The collaboration between Anirudh, Albuquerque Records and Smith Asher has resulted in the indie musical video album ‘Annakkiliye’, which is winning the appreciation of music lovers. Within a short span of its release, the song has garnered lakhs of digital views and received a warm response from audiences across the internet.

The music video takes viewers through a visually rich fantasy world featuring a dense forest, the sharp gaze of an eagle, a young man wandering alone, a forest goddess seated gracefully on a small hill beside a magnificent waterfall, a love that begins with an exchange of glances, resistance from tribal archers, an escape, lovers jumping together from a towering rock into deep waters, and finally escaping on the Yaali, the mythical creature celebrated in ancient Tamil art and temple sculptures, before soaring joyfully through the skies.

The combination of soothing melodies, romantic lyrics and captivating vocals adds to the appeal of the music video. Its association with Albuquerque Records, the label founded by ‘Rockstar’ Anirudh, has further contributed to the growing attention and response for the song.

One of the most distinctive aspects of the music video is the creation of the Yaali. The team led by director Vicky Pub has recreated the mythical creature entirely through graphics, without using artificial intelligence technology. The team spent nearly six months working extensively on the visuals to bring the Yaali to life and introduce the legendary creature to today’s Gen Z audience in a fresh and contemporary manner.

The effort has been appreciated by members of the film fraternity, who have highlighted the creation and depiction of the Yaali as an innovative aspect of the music video. Its journey from the traditional imagery of ancient Tamil sculptures to a fantastical world in the sky makes it one of the unique highlights of ‘Annakkiliye’.

Our Score