full screen background image

கமல் படத்தில் இணைந்த சீமான்!

கமல் படத்தில் இணைந்த சீமான்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரனின் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘விக்ரம்’ மற்றும் ‘அமரன்’ ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்படங்களை தொடர்ந்து இந்நிறுவனங்கள் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் தலைவர் சீமான் ஒப்பந்தமாகி, மதுரை படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் சீமான் மற்றும் கமல்ஹாசன் திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆக கை கோர்த்திருப்பதால், ‘சேயோன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் படம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியூள்ளது. 

இந்த நிலையில், சீமான் நடிக்கும் கதாபாத்திர புகைப்படத்தை வெளியிட்டு அதிகரிப்புகளை படக் குழு அதிகரிக்கச் செய்துள்ளது.

Our Score