full screen background image

உன்னி கிருஷ்ணன், வைஷ்ணவி நடிக்கும் ‘விசாரணை கைதி’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது!

உன்னி கிருஷ்ணன், வைஷ்ணவி நடிக்கும் ‘விசாரணை கைதி’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது!

வி.ஜி.சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நா.வெங்கடேசன் தயாரிப்பில் ‘விசாரணை கைதி’ என்ற படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் உன்னி கிருஷ்ணன் ஹீரோவாகவும், வைஷ்ணவி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மேலும் கூல் சுரேஷ், ரித்திகா, ஸ்ரேயா மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சந்திரன் சாமி, இசை – நரேஷ், படத் தொகுப்பு – ராஜேந்திரன், சண்டை இயக்கம் – ‘அசால்ட் மதுர’, எழுத்து, இயக்கம் – எஸ்.ஆர்.மணிகண்டன்.

ஒரு சிறிய கிராமத்தில் போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக பொறுப்புக்கு வருகிறார் ஹீரோ அந்த கிராமத்தில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலைகள் நடைபெற்று வருகின்றன இந்த கொலைகளை ஹீரோ தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் அவருடன் பணிபுரிந்த ஒரு காவலரும் கொலை செய்யப்படுகிறார். 

அதிர்ச்சியான ஹீரோ மேலும் தன்னுடைய விசாரணையை தீவிரப் படுத்துகிறார் முடிவில் இந்த கொலைகளை செய்வது யார் இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை திரைக்கதை. 

இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

 

Our Score