‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜமோகன் ஆவார்.
இவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘அட்ரஸ்’.
அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக–கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருந்த ஒரு கிராமம் தனது அதிகாரப்பூர்வ முகவரியையே (அட்ரஸ்) இழந்த சம்பவத்தை கொண்ட கதைக் களம் இது.
இதில் நடிகர் அதர்வா முரளி, ‘காளி’ என்ற இளைஞராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடித்துள்ளார். இவர்களுடன், தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘அட்ரஸ்’ படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.









