full screen background image

கமர்ஷியல் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள “இருள் சூழும் இரவினிலே” படம்!

கமர்ஷியல் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள “இருள் சூழும் இரவினிலே” படம்!

சாய் பாபா பிக்சர்ஸ் சார்பில் பழனியைச் சேர்ந்த எம். பாலா தயாரித்துள்ள புதிய தமிழ்த் திரைப்படம் “இருள் சூழும் இரவினிலே”.

கமர்ஷியல் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை சிவராம் இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திகில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளதாக படக் குழு தெரிவித்துள்ளது. 

“சிறந்த திரைக்கதையால் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் ‘இருள் சூழும் இரவினிலே’யும் இடம் பிடிக்கும்” என்ற நம்பிக்கையை இயக்குநர் சிவராம் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் டீசர் Moviebuff யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.

தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

திகில், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையின் கலவையாக உருவாகியுள்ள “இருள் சூழும் இரவினிலே” ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தின் தொழில் நுட்பக் குழு :

நடிகர்கள்: சிவராம், ரேகா ரமேஷ், நைடிலே ஷைவா, நந்தா கோபால், கீதா, அன்னபூர்ணா, அரவிந்த் மற்றும் பலர்.

இசை: விஷ்ணுவர்த்தன்

சண்டைக் காட்சிகள்: வயலன்ட் வேலு (100-வது திரைப்படம்)

ஒளிப்பதிவு: அருண் சுஷில், அனில் கிருஷ்ணா

படத்தொகுப்பு: அரவிந்த் ஜே.பி.

DI: நிகில் கரியப்பா

உடை வடிவமைப்பு: குமார்

தயாரிப்பு மேலாளர்: நாகேஷ்

கலை இயக்கம்: சச்சின்

ஒப்பனை: நந்தீஷ், சங்கர் ரத்தோட்

டிசைன் & VFX: பரதிராஜா

நடன அமைப்பு: ராஜ் தேவ்

PRO -Sivakumar

போஸ்ட் புரொடக்ஷன்: சிவானி ஸ்டுடியோஸ்.

#IrulSoozhumIravinile #TamilMovie #TamilCinema #HorrorComedy #CommercialEntertainer #Shivaram #SaiBabaPictures #Moviebuff #TamilFilm #UpcomingMovie #ViolentVelu #100thFilm #Vishnuvardhan #ArunSushil #MBala #Kollywood #TamilEntertainment #MovieTeaser #CinemaNews #TamilFilmUpdates

Our Score