நடிகர்கள் :
அர்ஜுன் தாஸ் – சரவணா
அன்னா பென் – மித்ரா
யோகி பாபு – ஜாக்கி
வடிவுக்கரசி – ஜானகி
அகிலன் – ஜீவா
நந்தகோபால் –கல்யாணசுந்தரம்
VTV கணேஷ் – கங்காதரன்
தீப ராமானுஜம் – சுதா
ராதா ரவி – அப்துல் ரசாக்
அருள் தாஸ் – கோபி
ஷாஜி சென் – எம் எல் ஏ செந்தில்
தம்பி ராமையா – வரதராஜ்
ரமேஷ் திலக் – Dr சுப்ரமணி
பரத்வாஜ் ரங்கன் – ரங்கன்
இமான் அண்ணாச்சி – சுட்டி அண்ணா
பொன்வண்ணன் – சந்திரசேகர்
ராகு எசக்கி – சிவா
சதானந்த் – சதா
தொழில் நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
படத்தொகுப்பு: அருள் மோசஸ் ஏ
தயாரிப்பு வடிவமைப்பு: ராஜ்
ஆடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
நடன அமைப்பு: சந்தோஷ்
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
ஒலி கலவை: டி. உதய் குமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோஸ்)
சிறப்பு ஒப்பனை: ஏ. ஆர். அப்துல் ரசாக்
ஸ்டில்ஸ்: மணியன்
பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் எம். பி.
நிர்வாகத் தயாரிப்பாளர்: பரத் துரைராஜ்
இணைத் தயாரிப்பாளர்கள்: பிரபா பிரேம்குமார், சித்து நாயர், அருண் பிரஜீத் மனோகரன், விஜய் எம். பி.
தயாரிப்பு: ஹரிஷ் துரைராஜ்
தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு: டெல்டா ஸ்டுடியோஸ்
வெளியீடு: டி. ஆர். எஸ். முத்துக்குமார் மற்றும் கே. ஜே. ஐயப்பன்
ஏமாறுபவர்கள் இருக்கும்வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது.
தமிழக கர்நாடக எல்லையில் இருக்கும் ஓரிடத்தில் ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ். அவருடைய மனைவி மித்ரா என்ற அன்னா பென், அம்மா வடிவுக்கரசி, மனைவியின் சகோதரன் யோகி பாபு, மித்ராவின் மகன் என்று ஐந்து பேர் கொண்ட குடும்பமே அந்த ஹோட்டலுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒருநாள் மித்ராவின் மகன் பள்ளியில் இருந்து கடத்தப்படுகிறான். அவனை கடத்தியவனை சிசிடிவி மூலமாக தெரிந்து கொள்ளும் குடும்பத்தினர் மிகப் பெரிய அதிர்ச்சியாகிறார்கள். அவர்களின் நினைவுகள் பிளாஷ்பேக் காட்சிகளாக விரிகின்றன.
சென்னையில் மங்களபுரம் என்ற பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் தாஸ் மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவருக்கு நிறைய கடன் பிரச்சனைகள். கடன்காரர்கள் வீடு தேடி வந்து டார்ச்சர் செய்கிறார்கள். அதனால் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறார் அர்ஜூனா தாஸ்.
பணம் சம்பாதிக்க வேண்டுமே என்ற வெறியில் இருந்த அர்ஜுன் தாஸூக்கு அவர் தினமும் சாப்பிடும் ஹோட்டல் ஓனரான இமான் அண்ணாச்சி ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
ஈபி பில் கட்டுவதற்காக கொடுத்த பணத்தை திருடினால் என்ன என்று அர்ஜுன் நினைக்க அது போலவே செய்கிறார். அந்த பகுதியில் வசிக்கும் அத்தனை பேரிடமும் ஈபி பில்லை கட்டாமலேயே அவர்களுடைய பணத்தை மட்டும் கபளிகரம் செய்கிறார் தாஸ். தொடர்ச்சியாக இது நடக்க கடைசியாக ஒரு நாள் குட்டு வெளிப்படுகிறது. அப்போது அர்ஜூன் தாஸ் தப்பித்து ஓடுகிறார்.
இன்னொரு பக்கம் வடிவுக்கரசிக்கு மிகப் பெரிய நோய் இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லியே அவருடைய மகன் யோகிபாபு நிறைய பேரிடம் நிதியுதவியாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
அண்ணா பெண் வீடுகளை லீசுக்கு எடுத்து அதை உள் வாடகைக்கு விட்டு சம்பாதித்து கொண்டிருந்தவர்… ஒரு நாள் மொத்தமும் வெளியாக இவரும் தப்பி ஓடுகிறார்.
இவர்களின் வழக்கை விசாரணை செய்த அப்போதைய இன்ஸ்பெக்டர் இப்போது ஓய்வு பெற்றிருந்தாலும் ஒரு மிகப் பெரிய திருட்டு அசைன்மென்ட் இவர்களிடம் ஒப்படைக்கிறார். அதற்காகத்தான் மித்ராவின் மகனை பிணைக் கைதியாக வைத்திருக்கிறார்.
மித்ராவின் மகனை மீட்பதற்காக இந்த ஐந்து பேரும் மறுபடியும் தொழிலுக்கு வருகிறார்கள். கடைசியில் இவர்கள் தப்பித்தார்களா? அந்தப் பையனை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ஹீரோ அர்ஜுன் தாஸ் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். ரொம்பவும் ஓவராக இல்லாமல் அதே சமயம் நடிப்பும் இல்லையே என்று சொல்லும் அளவுக்கு போகாமல் ஒரு நடுவாந்திரமாக கடனில் அவதிப்படும் ஒரு சராசரி இளைஞனின் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.
இடையிடையே அவரது காதல் வாழ்க்கையும் வந்து போக, அதுவும் கடைசியில் இந்த மோசடியினால் காணாமல் போகிறது. பொன்வண்ணனிடம் தைரியமாக சென்று பெண் கேட்டவர் கடைசியாக போலீஸில் மாட்டிக் கொண்டவுடன் அவருடைய காதலி கன்னத்தில் அறையும்போது அந்த அவமானத்தை தாங்க முடியாத ஒரு நடிப்பை காட்டும் அர்ஜுன் தாஸை பார்க்கும்பொழுது நமக்கு பாவமாகத்தான் இருக்கிறது.
மாட்டிக்க கூடாது என்ற ஒரு முன்னெச்சரிக்கையுடன் அர்ஜூனுக்கு ஏற்படும் அந்த பதற்றம்.. இப்படி மக்களுடைய பணத்தை திருடுகிறோம் என்ற குற்ற உணர்வில் தத்தளிப்பது… எப்படியாவது கடனை அடைத்து விடலாம் என்று நினைக்கும் அவருடைய தன்னம்பிக்கை… இதுவெல்லாம் சேர்ந்து இவரது கதாபாத்திரத்தை உயர்த்திப் பிடித்துள்ளது.
அன்னா பென், குற்ற செயல்களில் பெண்களும் ஈடுபடுவார்கள் என்பதை நிரூபிக்கும்விதமாக வீடுகளை குத்தகைக்கு எடுத்து மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடும் கதாபாத்திரம்.. தன்னுடைய மகன் மீதான பாசத்தினால் கடைசி கொள்ளையிலும் இருக்க வேண்டிய கட்டாயத்தை தன்னுடைய நடிப்பில் கொடுத்திருக்கிறார்.
யோகி பாபுவும், வடிவுக்கரசியும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்கள் என்பதைப் போல நம்மை இடையிடையே காப்பாற்றி இருக்கிறார்கள். அதிலும் வடிவுக்கரசி பேசுகின்ற பல வசனங்கள் அப்பாவித்தனமாக இருந்தாலும் ஒரு திடீர் சிரிப்பை வரவழைத்திருக்கிறது. 40 வருட கால சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு காமெடியான வேடத்தில் நடித்திருப்பது வடிவுக்கரசி நடித்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நம்புகிறோம்.
யோகி பாபு வழக்கமான காமெடியாக இல்லாமல் கதையுடன் உடன் ஒட்டி செல்லும் சில கமெண்ட்களினாலும், பேச்சினாலும் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கிறார்.
மேலும் இபி ஆபிஸில் வேலை செய்யும் வி.டி.வி.கணேஷ் ஒவ்வொரு முறையும் அர்ஜுன் தாஸை நம்பி அவருடைய அவரிடம் பொறுப்பை குடுத்துவிட்டு எஸ்கேப் ஆகும்போது சொல்லுகின்ற காரணங்களெல்லாம் எல்லாம் காமெடிதான்.
பொன்வண்ணன், அருள்தாஸ், ஷாஜி, ரமேஷ், இமான் அண்ணாச்சி என்று மற்றவர்களும் தங்களுடைய நடிப்பை அழுத்தமாகவே கொடுத்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் பாஸாகியிருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவில் அனைத்தையும் கண் கவர் காட்சிகளாகப் படமாக்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் இவர்கள் குடியிருந்த மங்களாபுரத்தின் ஊரையும் சுற்றியிருக்கும் இடங்களையும் அழகாக காண்பித்திருக்கிறார்.
கலை இயக்குநர் ராஜன் மின் வாரிய அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களை ரொம்பவும் வித்தியாசமாக அமைத்து பாராட்டைப் பெறுகிறார்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களைவிடவும், பின்னணி இசை அழகு. கேட்பதற்கு இனிமையாக இருந்தது. அதே சமயம் அடுத்து என்ன.. அடுத்து என்ன.. என்று திரில்லர் டைப்பில் படம் செல்வதால் அதற்கு ஏற்ற பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார்.
மோசஸின் படத்தொகுப்பில் எந்த தவறும் இல்லை. இடைவேளைக்கு பின்பு கிளைமாக்ஸ் வரையிலும் படம் பரபர என்று ஓடுகிறது.
லாஜிக் எல்லாம் பார்த்தால் இந்தப் படத்தை பார்க்கவே முடியாது என்கின்ற ஒரு நிலைமைக்கு இந்தப் படத்தை இயக்குநர் கொண்டு வந்திருக்கிறார். லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது போலத்தான் திரைக்கதை அமைத்திருக்கிறது.
ஒரு குற்றவாளி தானாக உருவாக்கப்படுகிறான் என்பதைத்தான் இந்தப் படத்தில் இயக்குநர் அழுத்தமாக சொல்கிறார். ஆனால், அதுவே தவறுதான். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் திருடுவதையும், கொள்ளையடிப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அந்த வகையில் ஒரு மோசடிக்கார கும்பலின் கதையாக மட்டுமே நான் இதை கொடுத்திருக்கிறேன் என்று இயக்குநர் செல்வதால் நாமும் விட்டு விடுவோம்.
எங்கிருந்தோ வந்து ஒன்று சேர்ந்த இந்த மூன்று குடும்பமும் கடைசியாக திருடுவதற்கு எந்த ஒரு குற்ற உணர்வு இல்லாமல் இறுதி வரையில் திருடுவதும், கொள்ளையடிப்பதும் அவருடைய குடும்ப சூழலுக்காக அவர்களை செய்கிறார்கள் என்று இயக்குநர் அழுத்தமாக பதிவு செய்தாலும் தப்பு தப்புதான் இயக்குநரே….
RATING : 3 / 5









