full screen background image

புதுமுகங்கள் நடிக்கும் ‘நடு நாடு’ திரைப்படம்

புதுமுகங்கள் நடிக்கும் ‘நடு நாடு’ திரைப்படம்

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘நடு நாடு’.

இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக அருண்குமார், நாயகியாக அனுஸ்ரீ நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம், மாறுபட்ட வேடத்தில் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட் செலவில் முழுக்க, முழுக்க கடலூர் மாவட்டம் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

கல்வியில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

‘தமிழ்’ திரைப்படத்தில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி இசையமைக்க, ஒளிப்பதிவை செந்தில் மாறன் கவனிக்க, படத் தொகுப்பினை r.k. செல்வன் செய்திருக்கிறார். பத்திரிக்கை தொடர்பாளர் : நித்தீஷ் ஸ்ரீராம்.

இத்திரைப்படத்தின் போஸ்ட்  புரொடெக்சன்ஸ் பணிகள் முடிவடைந்தது. 

விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளரும், இயக்குநரும் தெரிவித்தனர். 

Our Score