பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85.
கே.ராஜனின் தற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் பேசியபோது, “சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் வழியாக இன்று மாலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
மாலை 4.25 மணி அளவில், அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று அடையாறு பாலத்தில் நின்றது. வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதியவர் ஒருவர் காரில் இருந்து இறங்கினார். திடீரென பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடையாறு ஆற்றில் குதித்தார்.
இதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் தத்தளித்தவரை மீட்க முயன்றனர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே, அடையாறு போலீஸாரும் அங்கே விரைந்து வந்தனர். போலீஸாரின் விசாரணையில்தான் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் (85) என்பது தெரியவந்தது.
போலீஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தனர். இப்போது அடையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜன் மட்டும் கடந்த 5 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.
நேற்று காரில் வேளச்சேரி சென்றுவிட்டு திரும்பும் வழியில் அடையாறு திரு.வி.க பாலம் வந்ததும் காரை நிறுத்துமாறு ஓட்டுநர் தனசேகரனிடம் கூறியுள்ளார். ‘நீ காரை முன்னாடி நிறுத்து.. நான் சிறிது தூரம் காலாற நடந்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
‘நம்ம ஊரு மாரியம்மா’, ‘உணர்ச்சிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், ‘மைக்கேல்ராஜ்’, ‘உளவுத்துறை’, உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.
கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்தவர் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
இவருடைய மகன் கே.ஆர். பிரபுதான் ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.
தயாரிப்பாளர் கே. ராஜனின் மறைவிற்குத் தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.









