full screen background image

கெணத்த காணோம் – சினிமா விமர்சனம்

கெணத்த காணோம் – சினிமா விமர்சனம்

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேல் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் எங்க ஊரில் இருந்த ஒரு கிணத்தை காணோம் என்று புகார் கொடுக்கும் இன்றுவரையிலும் மிகப் பெரிய பாராட்டை கொடுத்திருக்கிறது.

அதில் இருந்த கெணத்தை காணோம் என்ற வசனத்தை மையமாக வைத்து கொஞ்சம் நகைச்சுவையுடன் கூடியதாக இருந்தாலும் எண்ணமும் அறியப்படாத தமிழகத்தில் இருக்கும் பல உள் கிராமங்களில் தண்ணீர் இல்லாத கொடுமையை சொல்லி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது கோடங்கிபட்டி என்ற கிராமம். உள்ளடங்கிய கிராமம் என்பதால் இந்தக் கிராமத்தில் இதுவரையிலும் தண்ணீர் வசதியில்லை.

ந்தப் பகுதி மக்கள் இன்றைக்கும் மிக நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் ஊற்றுகளில் தண்ணீரைப் பிடித்து வருகிறார்கள். த்தனை ஆண்டுகள் ஆன பின்பும், எத்தனையோ தேர்தல்கள் வந்து போன பின்பும், எத்தனையோ அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மாறி மாறி வந்தும் கோடங்கிபட்டியின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

தே ஊரில் இருக்கும் ஒரு சின்ன கோவிலில் பூசாரியாக இருக்கிறார் யோகி பாபு. அவர் ஒரு சிறந்த சிற்பக் கலை நிபுணர். பக்கத்து ஊரில் வசிக்கும் லவ்லினை தீவிரமாக காதலிக்கிறார் யோகி பாபு. லவ்லினும் இவரை காதலித்து திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்.

ஆனால் லவ்லினின் அப்பா அந்த ஊரில் பொண்ண குடுத்து தண்ணிக்காக என் பொண்ணு குடத்தைத் தூக்கிட்டு அலைவதை என்னால் பார்க்க முடியாது. நான் பொண்ணை மாட்டேன் என்று மறுக்கிறார். ஆனால், லவ்லினோ எப்பொழுது வேண்டுமானாலும் யோகி பாபு கூப்பிட்டால் உடனே வந்து விடுகிறேன் என்கிறார். யோகி பாபு இந்தப் பிரச்சனையை எப்படி சமாதானமாக பேசி முடிப்பது என்பது தெரியாமல் இருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் ஊரின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கிணறு வெட்டுவதற்காக அந்த ஊரிலேயே இடம் தேடுகிறார்கள் ஊர் பெரியவர்கள். அப்போது யோகி பாபுவின் வீட்டுக்கு முன்புறம் உள்ள இடத்தில் கிணறு தோண்டினால் நீர் இருக்கும் என்று தெரிகிறது.

யோகி பாபு முதலில் அந்த இடத்தை தர மறுப்பவர் பின்பு ஊர் மக்கள் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க சம்தித்து போர் போடாமல் கையால் தோன்டினால் அனுமதி தருகிறேன் என்கிறார்.

அவருடைய விருப்பத்தின்படியே அந்த ஊர் மக்களே வீட்டுக்கு ஒருவராக கிணறை தோன்றுகிறார்கள் தண்ணீருக்கு இன்னும் எவ்வளவு தூரம் தோண்ட வேண்டுமோ என்று நினைத்து வருத்தப்படுகிறார்கள் அந்த மக்கள்.

ஆனால், தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்பு அந்த இடத்தில் கிடைக்கிறது. இந்த விஷயம் அரசு அதிகாரிகளுக்கு போக தொல்லியல் துறையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமும் இந்தப் பிரச்சனையில் தீவிரமாக இறங்குகிறார்கள்.

தொல்லியல் துறை நிபுணர்கள் அதை ஆராய்ச்சி செய்து விட்டு இந்த ஊர் முழுவதும் பல இடங்களில் தோண்டி பார்த்தால்தான் தெரியும் என்பதால் அந்த ஊர் மக்கள் அனைவரிடமும் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறும்படி சொல்கிறார்கள்.

மாட மாளிகையாக இல்லாமல் குடிசை வீடு, சின்ன ஓட்டு வீடாக இருக்கும் அந்த கிராமத்து மக்கள் வீட்டை காலி செய்வதை எதிர்க்கிறார்கள். நாங்கள் இங்குதான் பிறந்தோம். இங்கேதான் டிவோம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசு மாவட்ட ஆட்சித் தலைவரை வைத்து ஆசை வார்த்தைகளை சொல்லி ஊர் மக்களின் மனதை கரைக்கப் பார்க்கிறது. இன்னொரு பக்கம் யோகிபாபுவும் தன் வீட்டை காலி செய்ய முடியாது என்கிறார்.

இதற்கு மேல் என்ன நடந்தது? அந்த ஊர் மக்கள் வீடுகளை காலி செய்தார்களா? யோகி பாபு அந்த மக்களுக்கு என்ன உதவி செய்தார்? அவருடைய திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவாரசியமான திரைக்கதை.

மண்டேலா படம் போல் யோகிபாபுவுக்கு இந்தப் படம் நிச்சயம் பெருமையை பெற்றுத் தரும். அவரும் தன்னுடைய வழக்கமான கேலி கிண்டல் இதையெல்லாம் விட்டுவிட்டு மிக இயல்பாக அந்த ஊர் மக்களின் ஒருவனாக நடித்திருக்கிறார். ஊர் பூசாரியாகவே இருந்தாலும் கடவுள் பக்தி என்பது வேறு மூடநம்பிக்கை என்பது வேறு என்பதை எல்லாம் பிரித்து சொல்லும் அளவுக்கு ஒரு பக்குவப்பட்ட மனிதனாக நடித்திருக்கிறார்.

எத்தனையோ காதல்கள் எப்படி பிறக்கின்றன என்பதை பல திரைப்படங்களில் பார்த்தாலும், இந்தப் படத்தில் யோகி பாபு தனக்கென ஒரு தனிப் பாணியில் காதலிக்க துவங்குகிறார். அந்தக் காதல் வார்த்தைகளும், காதலியை பார்க்கின்ற அந்த துடிப்பும் நிச்சயம் வேறு படங்களில் பார்த்திருக்க முடியாது.

ஹீரோயினாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். அதுவும் யோகி பாபுவிடம் கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டு அவரை அன்பினால் அடக்கப் பார்க்கும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

தன்னுடைய அப்பாவையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல் ஓடி வந்தும் திருமணம் செய்ய விரும்பாமல் அவர் அப்பாவிடம் தன் விருப்பத்தை அவர் சொல்கின்ற பொழுது ஒரு கிராமத்து இளம் பெண்ணாக நமக்கு தெரிகிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள் லவ்லின்.

படத்தில் நடித்திருந்த முக்கால்வாசிப்பேர் திரை உலகை சேர்ந்தவர்கள் இல்லை. அந்தப் பகுதி மக்களைத்தான் அவர்களுடைய எளிமையான சினிமாத்தனம் இல்லாத நடிப்பை அவர்களிடம் இருந்து பெற்று படத்திற்கு பெரும் பலம் சேர்த்து இருக்கிறார் இயக்குர்.

ஊர் தலைவராக நடித்தவர்.. ஒரு அரசியல்வாதி, ஒரு அரசியல் கட்சியின் தொண்டர் எப்படி இருப்பாரோ அப்படியே தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் நடக்கும் சண்டைகள் மக்களை மடைமாற்றும்விதமாக ஆசை வார்த்தைகளை சொல்லி அவர்களை திசை திருப்பும் பாங்கு.. இதோடு கடைசியாக போலீசாரிடம் அடி வாங்கிக் கொண்டு ஒரு அறையில் தனியாக இருக்கும்பொழுது அவரைக் காட்டிய அந்தக் கணமே கை தட்டி சிரிக்க வைத்துவிட்டது அவருடைய தோற்றம். அந்த அளவுக்கு மிக இயல்பான காமெடியை தன்னுடைய நடிப்பில் கொடுத்திருக்கிறார் அவர்.

நடிகர் ஹலோ கந்தசாமி பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். அதுவும் போலீஸிடம் அடி வாங்கிக் கொண்டே அவர் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சும் அந்த ரணகளத்திலும் ஒரு சிரிப்பை வரவழைத்து இருக்கிறது. மற்றைய கேரக்டர்களில் நடித்த அத்தனை பேருமே மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

தொல்லியல் துறையின் அதிகாரியாக நடித்திருக்கும் ராய்ச்சலும், அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணனும் படத்தின் கதை ஓட்டத்திற்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.

பெண்ணாக இருந்தும் ஒரு அரசு அதிகாரியாகவும், தொல்லியல் துறையில் ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதால் ராய்ச்சல் பவுசாக பேசி அந்த கிராமத்து மக்களின் மனதை மாற்றம் நிகழ்கிறார். வில்லி என்பதே தெரியாத அளவுக்கு வில்லத்தனத்தை தன்னுடைய வசனத்தில் கொடுத்திருக்கிறார் ராய்ச்சல்.

மாவட்ட கலெக்டராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான், யோகி பாபுவின் அக்காவாக நடித்தவரும் ஒரு பக்கம் தங்களுடைய கேரக்டர்களை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவாளரான தியாகராஜன் அந்த கரிசல் மண்ணையும், புழுதி பறக்கும் காற்றுள்ள அசுத்தமான அந்த ஊரையும்.. நீரே இல்லாத ஒரு பாலைவன ஊர் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் படத்தையும் அழகாக தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மிக எளிதாக நம்முடைய காதுகளில் நுழையும் அளவிற்கு இளமையான வார்த்தைகளால் ஒலிக்கிறது. பின்னணி இசையும் நாடகத்தனமாக இல்லாமல், அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலை நமக்கு சொல்வதற்காக தூண்டி விடுவதுபோல அமைந்துள்ளது.

எந்த ஒரு வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தை தன்னுடைய கலை இயக்கத்தால் அழகுபடுத்தி காட்டியிருக்கிறார் கலை இயக்குர் சுபநேந்தர்.

ஒரு கிடாயின் கருணை மனு’, சத்திய சோதனை என்று இரண்டு அழகான திரைப்படங்களை கொடுத்த இயக்குர் சுரேஷ் சங்கையாவின் திடீர் மரணம் அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமா உலகத்திற்கும் பெரும் இழப்புதான் என்பதை அவர் கடைசியாக இயக்கியிருந்த இந்த திரைப்படத்தின் மூலமாக நமக்கு காட்டி இருக்கிறார். சொல்லியும் இருக்கிறார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் கோடி கோடியாக கொட்டி மேம்பாலங்களையும், பூங்காக்களையும் அமைத்து அதை அழகு படுத்துவதற்காக வருடம் தோறும் கோடிக்கணக்கான ரூபாயை கொட்டிக் கொடுக்கும் இந்த அரசுதான், இன்னமும் தமிழகத்தின் உள் கிராமங்களில் தண்ணீர் வசதியை ஏற்பாடு செய்யாமல் உள்ளது.

அந்தக் கோபத்தையும் அந்த செய்தியையும் அந்த மக்களுடைய கடின வாழ்வியலையும் இந்தப் படத்தில் அழகாக பதிவு செய்து தன்னுடைய இயக்குனர் என்ற பெயருக்கு ஏற்ற ஒரு பொறுப்பினை உணர்ந்து இந்தப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குர் சுரேஷ் சங்கையா.

படத்தின் முதலிலிருந்து கடைசிவரையில் பார்க்கும்பொழுது அந்த கிராமத்துக்குள் நாமும் உலா வந்தோம் என்கின்ற ஒரு உணர்வையே இந்தப் படம் கொடுத்திருக்கிறது. இந்த அளவுக்கு சிறப்பான இயக்கத்தையும், சிறந்த கதை சொல்லியாகவும், ஒரு சிறந்த படைப்பாளியாகவும் வாழ்ந்த சுரேஷ் சங்கையாவை தமிழ்த் திரையுலகம் என்றும் நினைவு கூறும்..!

RATING : 4 / 5

Our Score