full screen background image

“4 இடியட்ஸ்” திரைப்படம் மூலம் மீண்டும் தயாரிப்பைத் துவக்கும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்!

“4 இடியட்ஸ்” திரைப்படம் மூலம் மீண்டும் தயாரிப்பைத் துவக்கும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை வழங்கி தனித்துவமான முத்திரை பதித்த தயாரிப்பு நிறுவனம்  லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’, ‘கோகுலத்தில் சீதை’, ‘உள்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘உன்னை நினைத்து’ போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த  இந்த நிறுவனம், நிறுவனர்கள் கே. முரளிதரன் மற்றும் சுவாமிநாதன் மறைவுக்குப் பிறகு தயாரிப்பில் சற்று இடைவெளி எடுத்தது.

அந்த அமைதிக்குப் பிறகு, புதிய உற்சாகத்துடன் மீண்டும் தயாரிப்புத் துறையில் களமிறங்கியுள்ளது லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். கே. முரளிதரன் அவர்களின் புதல்வர்கள் எம். கோகுல் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஸ்ரீ வர்ஷன் இணைந்து நிறுவனத்தின் 27வது தயாரிப்பாக “4 இடியட்ஸ்” (Four Idiots) திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் , , ஆகியோரின் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதனால், வர்த்தக அம்சங்களும், சுவாரஸ்யமான கதைக்களமும் கலந்த ஒரு திரைப்படமாக “4 இடியட்ஸ்” உருவாகியுள்ளது.

பிளாக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் டிவி மூலம் பிரபலமான காமெடி நட்சத்திரம் புகழ் கதாநாயகனாக நடித்துள்ளார். ரவி மரியா காமெடி வில்லனாகவும், மும்பையைச் சேர்ந்த பிரசுயா நயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் , , , உள்ளிட்டோர் குணச்சித்திர வேடங்களில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

யூகே செந்தில் குமார் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமான காட்சிகளால் கவர்ந்திழுக்கிறது. புதுமுக இசையமைப்பாளர் சுபாஷ் முனிரத்தினம் இசையமைத்துள்ளார். எஸ்.என். பாசில் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநர் மு. பிரபாகரன் கதைத் தன்மைக்கு ஏற்ற கலை அமைப்பை வழங்கியுள்ளார். டாவின்சி சரவணன் ஒப்பனையில், பி. மாரியப்பன் அலங்காரத்தில் பங்களித்துள்ளனர்.

“4 இடியட்ஸ்” திரைப்படத்திற்கு யூ/ஏ 13 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு துள்ளலான பாடல்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன், குடும்பம் முழுவதும் இணைந்து ரசிக்கும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு இனிதே நடைபெற்ற நிலையில், விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க வருகிறது “4 இடியட்ஸ்”.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் மீண்டும் ஒரு முறை தரமான பொழுதுபோக்கை வழங்கும் உறுதியுடன் களமிறங்கியுள்ளது. “4 இடியட்ஸ்” – சிரிப்பும் சுவாரஸ்யமும் இணையும் ஒரு புதிய முயற்சி!

Our Score