full screen background image

மைலாஞ்சி – சினிமா விமர்சனம்

மைலாஞ்சி – சினிமா விமர்சனம்

பிரபல எழுத்தாளரும், வெற்றி பெற்ற பல திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா எழுதி இயக்கியிருக்கும் முதல் படம்தான் இந்தமைலாஞ்சி.’

கன்னி மாடம்படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை வென்ற ஸ்ரீராம் கார்த்திக் இயற்கை புகைப்பட கலைஞர் வேடத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

கோலிசோடா 2’ படத்தில் நடித்த கிரிஷா குருப் நாயகியாக நடித்திருக்கிறார். முனீஷ்காந்த், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம்புலி நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத் தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மையான படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பாளராக பங்காற்றியுள்ளார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவிஉள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

2017-ம் ஆண்டு வெளிவந்தஆறு அத்தியாயம்திரைப்படத்தில் இடம் பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியிருந்தார். அவர் இயக்கியிருக்கும் முதல் முழு நீள திரைப்படம் இதுவாகும்.

ஊட்டி அருகில் இருக்கும் மைலாஞ்சி என்ற இடம்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.

அந்த மைலாஞ்சியில் அரிய வகை பறவைகளை வைத்து பறவை பூங்காவை நடத்தி வருகிறார் ஹீரோயின் கிரிஷா குரூப். இவருக்கு அப்பா இல்லை. ஆனால் சித்தி உண்டு. அந்த சித்தியும் தன்னுடைய குடிகார தம்பிக்கு கிரிஷாவை திருமணம் செய்து கொடுப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த சித்தியின் கொடுமையையும், அர்ச்சனையையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கிரிஷா தன்னைவிட வயது குறைந்த நான்கைந்து சிறுவர்களுடன் பேசி பழகி வருகிறார்.

அவர்களோ யாரையாவது காதலித்து வீட்டைவிட்டு ஓடிப் போய்விடும்படி அட்வைஸ் கொடுக்கிறார்கள் இந்த ஐடியாவுக்கு ஓகே சொல்லும் கிரிஷா குரூப் தன்னுடைய வீட்டில் வாடகைக்கு குடி வரும் ஒரு வாலிபனை காதலிக்கிறார்.

அந்தக் காதலை கிரிஷா சொல்லப் போகும் நேரத்தில் திடீரென்று அந்த வாலிபர் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு போய்விடுகிறார். இதனால் ஏமாற்றமடைகிறார் கிரிஷா.

இந்த நேரத்தில்தான் அந்த ஊருக்கு வருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். ஸ்ரீராம் கார்த்திக் பறவைகளை படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட புகைப்பட கலைஞர் என்பதால் அவர் தேடி வந்த பறவையை கிரிஷா குரூப் அடையாளம் காட்ட இருவருக்கும் இடையில் நட்பு விழுகிறது.

இப்பொழுது கிரிஷா குரூப் ஸ்ரீராம் பார்த்திக்கிடம் தன்னுடைய காதல் கதையை சொல்லி அந்த வாலிபரை கண்டுபிடிக்க முடியுமா என்று உதவி கேட்கிறார். ஸ்ரீராம் கார்த்திக் கிரிஷா குரூப்பின் எதார்த்தமான பேச்சு மற்றும் இயல்பான நடத்தையை பார்த்து அவள் மீது காதல் கொள்கிறார்.

இந்தக் காதலை ஸ்ரீராம் தன் மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டு கிரிஷா குரூப் சொன்ன அவளுடைய காதலனைத் தேடுகிறார்.

தான் காதலிக்கும் பெண் என்பதால் இதை எப்படி சொல்வது என்ற தயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். இன்னொரு பக்கம் கிரிஷா குரூப்பும் மனதுக்குள்ளையே ஸ்ரீராம் கார்த்திக்கின் மீது ஒரு காதல் கொண்டு விட்டதாக அவருக்கு தெரிகிறது.

இந்த நேரத்தில் திரிஷாவின் காதலனும் மைலாஞ்சி வந்து சேர மூன்று பேரும் தத்தளிக்கிறார்கள். அதோடு ஸ்ரீராமும் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட பிரச்சனை பெரிதாக நிற்கிறது.

இதற்கு பின்பு நடந்தது என்ன.. ஸ்ரீராம் யாரை திருமணம் செய்தார்.. கிரிஷாவின் நிலைமை என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகம் ஸ்ரீராம் கார்த்திக் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார். சாதாரண வசனத்தையே சாதாரணமான நடிப்பின் மூலமாக காட்டி இருக்கிறார். ஹீரோ என்பதற்கான ஒரு இருப்பை அவர் திரையில் காட்டவில்லை என்பது வருத்தமான விஷயம்.

இன்னொரு பக்கம் கிருஷா குரூப்புக்கு கல்யாண வயதுடைய இளம் பெண் தோற்றமில்லை. அவரைப் பார்க்கும் பொழுது அது தெரியவில்லை. அதோடு சின்ன குழந்தை போல அவர் பேசுவதும், அவர் நடந்து கொள்வதும் இந்தப் பிள்ளைக்கு எதுக்கு காதல் என்று நமக்குள்ளேயே ஒரு கேள்வியை எழுப்ப வைத்துவிட்டார் இயக்குர். கிரிஷா குரூப்பும் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார்.

 

சித்தி கொடுமை தாங்காமல் பார்த்த உடனேயே யாராவது ஒரு பையனை காதலித்து அவனுடன் ஓடிப் போக வேண்டும் என்று நினைப்பதெல்லாம் சிறு பிள்ளைத்தனம். இதுதான் நமக்கு கிரிஷா குரூப்பின் காதல் மீது ஒரு ஆர்வமும், நம்பிக்கையும் வராததற்கு காரணம்.

இன்னொரு பக்கம் சிங்கம் புலி ஏதோ காமெடி செய்கிறேன் என்று சொல்லி வசனத்தை பேசிவிட்டு போயிருக்கிறார். முனீஸ்காந்தும் அவ்வப்போது வந்து தலையை காட்டிவிட்டு செல்கிறார். கிரிஷா குரூப் முதலில் காதலிக்கும் வாலிபராக நடித்தவர் அவருடைய காட்சிகள் குறைவு என்றாலும் பார்ப்பதற்கு அழகாகவும், ஸ்டைலாகவும் இருந்தார். அவரையே ஸ்ரீராம் கார்த்திக் இடத்தில் நடிக்க வைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

ஹீரோயினின் சித்தியாக நடித்திருக்கும் தக்ஷா தயாளையும், இவருடைய தம்பியையும் பார்த்தால் கொஞ்சம்கூட எந்த ஒரு வகையான ஒற்றுமையும் இல்லை. ஆனால், எப்படி இவரை தம்பியாக நடிக்க வைக்க இயக்குர் முன் வந்தார் என்பதும் தெரியவில்லை

படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவுதான். செழியனின் அற்புதமான ஒளிப்பதிவில் முதலில் இருந்து கடைசிவரையிலும் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

அந்த அளவுக்கு பாலு மகேந்திரா கண்களில் படாத இடத்தை எல்லாம் இந்தப் படத்தில் அழகாக கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறார். இது ஒன்றுக்காகவே இந்தப் படத்தை நாம் பாராட்ட வேண்டும்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கக் கூடியவைதான். சிறந்த ராகத்தில் பாடல்கள் ஒலிக்கின்றன. ஆனால் எழுதப்பட்ட வரிகள் அவ்வளவாக நம்மை கவரவில்லை என்பது வருத்தமான விஷயம்.

இதற்கு இசைஞானி மட்டுமே பொறுப்பல்ல. இப்போதைய இளம் கவிஞர்கள் யாருமே 1985, 1990-களில் கொடி கட்டி பறந்த மூத்த பாடலாசிரியர்களை போல் இல்லை. அந்தக் காலத்திய பாடல்களை எல்லாம் கேட்டு நாம் திரும்பத் திரும்ப பாடி வரும் சூழலில், இக்காலத்திய கவிஞர்களின் திறமை குறைவாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து விடலாம். அதற்கு இந்தப் படமும் ஒரு சான்று!

ஹீரோயின் கதாப்பாத்திரத்திற்கு கிரிஷா குரூப் பொருத்தமாக இல்லை. அதே சமயம் லோ பட்ஜெட் படம் என்றாலும் இன்னும் கொஞ்சம் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட ஹீரோ, ஹீரோயின்களை வைத்து படத்தை எடுத்திருக்கலாம். கதை, திரைக்கதையும் நாம் அதிகம் விரும்புவதுபோல ஈர்ப்பாக இல்லை. சுவாரசியமாக இல்லை என்பதால் அதுவும் ஒரு பக்கம் நம்மை சோதித்து விட்டது.

உலக சினிமாக்களின் காதலனாஇயக்குநர் அஜயன் பாலா நம்முடைய தமிழ் சினிமாவுக்கு ஏற்ற கதை, திரைக்கதையை வடிவமைப்பதில் மட்டும் கொஞ்சம் தவறு செய்து விட்டார் என்றே சொல்லலாம்.

மற்றபடி, இந்த படம் நிச்சயமாக ஒரு முறை பார்த்து ரசிக்க்க் கூடிய படம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

RATING : 3 / 5

Our Score