full screen background image

“பாலய்யாதான் சிவ பெருமான்” – பாராட்டித் தள்ளிய பிரபலங்கள்!

“பாலய்யாதான் சிவ பெருமான்” – பாராட்டித் தள்ளிய பிரபலங்கள்!

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் இன்று சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம்தான். என்.டி.ஆர். உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் “காத்திரு.. கடவுள் உடன் நடிக்கலாம்” என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது.

இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ.பி.நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு. மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இவர் கொண்டாடப்படுவார்.

பாலைய்யா ஒரு நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சக்தி. அவர் மாதிரி இப்போது எந்த ஒரு நடிகரும் இயங்க முடியாது. மைனஸ் 10 டிகிரியில் வெறும் உடலுடன் எந்த சீஜியும் இல்லாமல், ஜார்ஜியாவில் நடித்தார்.

இப்படம் எனக்கு மிகச் சிறந்த அனுபவம். இதுவரையிலும் நான் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். நான் அகண்டா படத்திலும் நடித்துள்ளேன். Both are not same. இப்படம் மொழி தாண்டிய ஒரு பான் இந்திய திரைப்படம். நம் இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் படைப்பு. நீங்கள் படம் பார்த்து கொண்டாடுவீர்கள். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். நம் ஆன்மீக உணர்வை யார் வந்து, என்ன சொன்னாலும் அழிக்க முடியாது. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படம் எனக்கு மிகப் பெரும் பெருமை. அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகை விஜி சந்திரசேகர் பேசும்போது, “அகண்டா-2 குழுவை சென்னைக்கு வரவேற்கிறேன். ஹைதராபாத் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, சென்னையில் விழா நடக்கிறது என்றவுடன் நான் ஷீட்டிங்கில் இருந்து சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அகண்டா-2 படத்தில் நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. என்னை தேர்ந்தெடுத்து, நடிக்க வைத்த போயபாடி ஶ்ரீனு சாருக்கு நன்றி. அந்தப் படத்தில் நடித்தது சிவனின் அருள். எனக்குள் வந்த மாதிரி இருந்தது. எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தனர். நான் 2,3 காட்சிகள் நடித்தாலும், இப்படத்தில் முழுமையாக வருவது போல் செய்துள்ளார்.

சிவன் இப்படித்தான் இருப்பார் என பாலைய்யா சாரை காட்டி என் பேரக் குழந்தைகளுக்கு சொல்வேன். வெட்ட வெளியில் செருப்புகூட இல்லாமல் அவர் உழைத்த உழைப்பை நேரில் பார்த்து பிரமித்தேன். தமன் எல்லோரையும் அதிர வைக்கும்படி ஒரு அற்புதமான இசையை தந்துள்ளார். கமர்ஷியல் தாண்டி தெய்வீகத்தை தர போயபட்டி ஶ்ரீனுவால்தான் முடியும்.

தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரையும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலைய்யா சாரையும் இணைத்து படம் செய்யுங்கள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி. அகண்டா-3-ஐயும் கண்டிப்பாக செய்யுங்கள் நன்றி.

இணை தயாரிப்பாளர் கோடி பருச்சுரி பேசும்போது, “பத்திரிக்கை ஊடக நண்பர்களின் அன்புக்கு நன்றி. இது உண்மையாகவே ஒரு பான் இந்திய படம். நம் எல்லோரும் கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும். இயக்குநர் போயபாடி ஶ்ரீனுவுக்கும், பாலைய்யா சாருக்கும் என் நன்றிகள். அனைவரும் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி…” என்றார்.

இயக்குநர் போயபாடி ஶ்ரீனு பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். என் 3 படங்களுக்கு கேமராமேனாக வின்சன் சார் செய்தார். அவர் மூலம் தமிழ் தெரிந்தாலும், அதிகம் பேசத் தெரியாது. அகண்டா தெலுங்கு மொழிக்கான படமல்ல அதே போலத்தான் இந்த அகண்டா-2-வும். இது இந்துகள் மற்றும் இந்தியாவின் ஆன்மாவை, ஆன்மிகத்தை கொண்டாடும் படம்.

தெலுங்கு, தமிழ், என எல்லோருக்குமான படம். பாரதம் முழுக்க உள்ள அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள். தேகம், தேசம், தெய்வம் என எல்லாவற்றிக்குமான படம். ஆனால் அதை கமர்ஷியலாக தந்துள்ளோம். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நந்தமூரி பாலகிருஷ்ணா பேசும்போது, “என் உயிருக்கு இணையான தமிழ் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள்.  அகண்டா-2 விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள்.  என் சொந்த வீட்டுக்கு வந்ததுபோல உள்ளது. நான் இங்குதான் பிறந்தேன். சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி. என் அப்பா என் டி ஆரின் வாழ்க்கையெல்லாம் இங்குதான் நடந்தது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜியுடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. என் அப்பா என்.டி.ஆர். தமிழ் நாட்டின் மீது மிகுந்த அன்போடு இருந்தார்.

அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா? என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் இது எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதைகூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப் படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல்லை.

இது இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப் படம். சனாதான தர்மத்தை சக்தியை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பாதான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார். நான் ரொம்ப அதிர்ஷடசாலி.

நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படங்கள் தொடர் வெற்றியைப் பார்த்துள்ளேன். ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்கு காத்திருக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். டிசம்பர் 5-ம் தேதி இந்த அகண்டா-2 வெளியாகிறது. அனைவரும் படம் பாருங்கள். கொண்டாடுங்கள்.. நன்றி.” என்றார்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள்.

இப்படத்தில் ஆதிப் பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின்  உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.

படத்தின் தொழில் நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவாளர்கள் C.ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே இருவரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும்  உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் தமன் S உடைய  அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும்,  A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.

Our Score