full screen background image

வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படம் துவங்கியது!

வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படம் துவங்கியது!

‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி.ஜே.சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் ‘டயங்கரம்’.

சம கால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. அத்துடன் படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும்’ டயங்கரம்’ எனும் திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராகவும், அஸார் நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.  

“இந்தத் திரைப்படம் இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றும், காமெடி, எமோசன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடித்தல் உள்ளிட்ட இளைஞர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக ‘டயங்கரம்’ இருக்கும்” என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல்.ஏ. ஸ்டுடியோவில் இன்று காலையில் சிறப்பாக நடைபெற்றது.

ந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.‌

படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் – வி. ஜே.சித்து- இளவரசு கூட்டணியில் வெளியான இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ – இணையத்தில் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VELS FILM INTERNATIONAL LAUNCHES ‘DAYANGARAM’ – DIRECTORIAL DEBUT OF VJ SIDHU

The grand launch ceremony of “Dayangaram”, produced by Vels Film International under the banner of Dr. Ishari K. Ganesh, was held with grandeur at L.A. Studio, Nungambakkam, Chennai.

The film marks the directorial debut of popular digital star and ‘Dragon’ fame actor VJ Sidhu, who also plays the lead role in this exciting new venture titled “Dayangaram.”

The film features a stellar ensemble cast including Natti Natraj, Kali Venkat, Ilavarasu, Nithin Sathya, Harshath Khan, and Adithya Kathir, among others in prominent roles.

Technical Crew:

Director & Lead Actor: VJ Sidhu | Producer: Dr. Ishari K. Ganesh (Vels Film International) | Cinematography: P. Dinesh Krishnan | Music: Sidhu Kumar | Editor: Pradeep E. Raghav | Costume Designer: A. Keerthi Vasan | Choreographer: Azhar.

Rooted in the lifestyle and aspirations of today’s youth, “Dayangaram” is a comedy-entertainer filled with humor, emotions, and the spirit of self-discovery. The film aims to strongly resonate with the younger generation while providing wholesome entertainment for all audiences.

The music of the film will be released under the Vels Music International label.

Speaking about the project, the team shared that “Dayangaram” will capture the vibrant energy, humor, and heartfelt emotions of modern youth, promising a refreshing cinematic experience.

The launch event witnessed the presence of several notable personalities from the Tamil film industry, who extended their best wishes to the Dayangaram team for a successful journey ahead.

Further updates regarding the shooting schedule and theatrical release will be officially announced soon by the production team.

Meanwhile, the official announcement video featuring Vels Film International Producer Dr. Ishari K. Ganesh, VJ Sidhu and Ilavarasu has already crossed over 3 million views online, creating remarkable buzz ahead of the film’s release.

Our Score