full screen background image

Friends Magic Films முதல்முறையாக தயாரிக்கும் production No-1

Friends Magic Films முதல்முறையாக தயாரிக்கும் production No-1

திரைப்பட கல்லூரி மாணவரும், இயக்குநருமான N.L.Sri இயக்கும் இரண்டாவது படமாக FMF production No-1 படத்திற்கான வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதிக்கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது.

Big boss பிரபலம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், 4 முக்கிய கதாபாத்திரங்களில் வினோத், பரிதாபங்கள் ராகுல், மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் முதல்முறையாக 6 புதிய கதாநாயகிகளை அறிமுகம் செய்ய உள்ளனர்.

“நட்பின் சிறப்பையும், காதலின் சிறப்பையும் பேசும் எனவும் தற்போதைய Genz தலைமுறைக்கு ஏற்ற கலகலப்பான படமாக இருக்கும்..” எனவும் இயக்குநர் NL Sri தெரிவித்துள்ளார் .

ஒளிப்பதிவு – நரேந்திர குமார். இவரும் திரைப்பட கல்லூரி மாணவர்தார். இசையாமைப்பாளர் தரன் குமார் உட்பட மிக சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க முழு மூச்சுடன் களமிறங்கி இருக்கிறது Friend Magic Films .

சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட சித்தப்பு promo இணையத்தில் viral ஆனது குறிப்பிடத்தக்கது .

இந்த promo-வில் படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் ஆசிரியாக super star & Thalapathy ஆகியோருக்கு பாடல்கள் எழுதியுள்ள 2k kids-களின் favorite-ஆன வெற்றிப் பாடலாசிரியரான கு.கார்த்திக் பணி புரிகிறார் என காமெடியான promo மூலம் அறிவித்தது.

மேலும் விரைவில் அந்த big boss session-8 பிரபலம் யார் என அறிவிக்கப் போவதாகவும் படக் குழு தெரிவித்துள்ளது .

Our Score