தமிழ்த் திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘‘உயிருள்ளவரை உஷா’.
இந்நிலையில் கிட்டத்தட்ட 42 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
இது குறித்து நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது, ”‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தை தற்போதையை 4-கே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட திட்டமிட்டுள்ளேன். தொடர்ந்து, எனது பழைய படங்களை ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய உள்ளேன். அதற்காக, டி.ஆர்.டாக்கீஸ் என்ற நிறுவனத்தையம் தொடங்கி இருக்கிறேன்.

குடும்ப திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் வரவேற்பு அதிகம் உள்ளது. இந்த படத்தின் 2-ஆம் பாகம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அடுத்த மூன்று ஆண்டிற்குள் தனது டி.ஆர்.கார்டனில் பிரம்மாண்டமான செட் அமைத்து விடுவேன். தொடர்ந்து, புதிய காதல் திரைப்படம் ஒன்று எடுக்க தயாராகி வருகிறேன்..” என்றார்.









