‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக ‘கொம்புசீவி’ படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்தப் படத்தை ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத் தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார்.
இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல்முறையாக கை கோர்த்துள்ளார்.
தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது. சென்னையில் இன்று நிறைவுற்றது.
கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்து திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.









