full screen background image

‘திரு மாணிக்கம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே ஓடிடி சாட்டிலைட் உரிமம் விற்பனையானது..!

‘திரு மாணிக்கம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே ஓடிடி சாட்டிலைட் உரிமம் விற்பனையானது..!

சமுத்திரக்கனி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’. 

இந்தப் படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த ‘திரு.மாணிக்கம்’ படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், சாம்ஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

‘சீதாராமம்’ பட புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை அப்படியே பதிவு செய்து கண்ணுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார். விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்குநர் நந்தா பெரியசாமி படத்தை இயக்கியுள்ளர்.

சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்திருக்கும் மாபெரும் ஒரு சவால்தான் OTT மற்றும் SATELLITE வியாபாரம்.

கடந்த வருடங்கள் போல் இல்லாமல் மிகக் கடினமான சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்த வியாபாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகே OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம் முடிவாகும் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது.

இப்படியான இந்த காலக்கட்டத்தில் திரைக்கு வரும் முன்னரே ‘திரு.மாணிக்கம்’ திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழ வைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து ஜீ தமிழ் நிறுவனம், இந்த ‘திரு.மாணிக்கம்’ திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்.

 

Our Score