full screen background image

அருண் விஜய் – சித்தி இத்னானி – தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

அருண் விஜய் – சித்தி இத்னானி – தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது.

முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.

BTG Universal நிறுவன தலைவர் திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார்.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் C.S. இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். பத்திரிக்கை தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்.

தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்க விழா, படக் குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள, இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score