full screen background image

‘சமூக விரோதி’ படத்திற்கு தணிக்கை சான்று தர மறுப்பு..!

‘சமூக விரோதி’ படத்திற்கு தணிக்கை சான்று தர மறுப்பு..!

சீயோனா பிலிம் பேக்டரி  நிறுவனம் தயாரிப்பில் இயக்குர், சீயோன் ராஜா எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் சமூக விரோதி.’

இந்த ‘சமூக விரோதி’ திரைப்படத்தில் பிரஜின், நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், வழக்கு எண் முத்துராமன் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு- ஜிஜூ மோன் P.S., இசை – மலாக்கி, கலை இயக்கம் – முஜிபுர் ரஹ்மான், படத் தொகுப்பு – மீனாட்சி சுந்தர், சண்டை இயக்கம் – பிரபு, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினு, தயாரிப்பு – T. அருள்மணி சீயோன் ராஜா, பத்திரிக்கை தொடர்பு – சக்தி சரவணன்.

இயக்குநர் சீயோன் ராஜா, ஏற்கெனவே ‘பொது நலன் கருதி’ படத்தினை தயாரித்து, இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் அனைத்து பணிகளும் முடிந்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக திரைப்பட தணிக்கை குழுவினர் படம் பார்ப்பதாக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டார்கள். இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் மறு ஆய்வு குழுவிற்கு விண்ணப்பித்துள்ளது.

சமீபத்தில்தான் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் படம் பற்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Our Score