தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றும் எழுத்தாளர்களுக்கென்று தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததால் 2023-2025-ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பதவிகளுக்கு மிகாமல் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் அனைத்து போட்டியாளர்களும் அவரவர் பதவிகளுக்கு போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
சங்கத்தின் தலைவராக – ஏ.எஸ்.தாமஸ் கென்னடி
செயலாளராக – ஆர்.கே.பெருமாள் நெர்
பொருளாளராக – ஆர்.தர்மலிங்கம்
துணைத் தலைவர்களாக – எஸ்.குமரேசன், வி.பி.ரவிகரண்
இணைச் செயலாளர்களாக – ஏ.அப்துல்லா, கெளதம் சஞ்சய்
செயற்குழு உறுப்பினர்களாக – கே.செல்வ வடிவேல், ஜா.தீபா, என்.ஜெகநாதன், வி.ரத்தினம், வி.பிரபாகர், இமயவரம்பன் (எ) கே.நாகராஜன், சங்கரபாண்டி.
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!










