full screen background image

பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை-4’

பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை-4’

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர்.சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரும் கொண்டாடும்படி இருக்கும்.

அந்த வகையில் அவர் உருவாக்கிய ‘அரண்மனை’ படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,  தற்போது 4-ம் பாகம், மிகப் பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை Benzz Media PVT LTD சார்பில் தயாரிப்பாளர் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,  யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

தயாரிப்பு – Benz Media Pvt Ltd (A.C.S அருண்குமார்) and Avni Cinemax (P) Ltd (குஷ்பு சுந்தர்), எழுத்து இயக்கம் – சுந்தர்.சி,, வசனம் – வேங்கட் ராகவன், இசை : ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி, படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் – பொன்ராஜ், சண்டைப் பயிற்சி – ராஜசேகர் K, புகைப்படங்கள் – V.ராஜன், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (AIM).

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.

2024-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்று இப்படம் வெளியாகவள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score