full screen background image

கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீஸர் வெளியானது..!

கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீஸர் வெளியானது..!

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பான்-இந்தியா திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.’

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் முதல்முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ், இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – எஸ்.திருநாவுக்கரசு, படத் தொகுப்பு – ஷஃபிக் முகமது அலி, தயாரிப்பு வடிவமைப்பு – டி.சந்தானம், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், கலை இயக்கம் – பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன், நடன அமைப்பு – ஷெரிப் எம், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, ஒப்பனை – வினோத்.எஸ்., ஆடைகள் – சுபேர், பாடல்கள் – விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்., புகைப்படங்கள் – எம்.தினேஷ், VFX மேற்பார்வையாளர் – எச்.மோனேஷ், கலரிஸ்ட் – ரங்கா, பப்ளிசிட்டி டிசைன்ஸ் – ட்யூனி ஜான் (24 AM), டீசர் கட் – ஆஷிஷ், சவுண்ட் மிக்ஸ் – சுரேன்.ஜி., ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – கணேஷ் பி.எஸ்., தயாரிப்பு நிர்வாகம் – ஜி.துரைமுருகன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ராஜ்குமார், தயாரிப்பு மேலாளர்கள் – என்.சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள், நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன்.எம்., அசோசியேட் தயாரிப்பாளர்: பவன் நரேந்திரா, இணை தயாரிப்பு: கல் ராமன், எஸ். சோமசேகர், கல்யாண் சுப்ரமணியம், இணை தயாரிப்பாளர்: அலங்கர் பாண்டியன், தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன், இயக்குநர்கள் குழு : சீனிவாசன், ஆனந்த் புருஷோத், கார்த்திக் வி.பி., விக்னேஸ்வரன், ஜெகதீஷ், அரவிந்த் ராஜு ஆர், மகேஷ் பாலு, சூரஜ் தாஸ், சாய், முருகானந்தம், ராகுல். எம், அவினாஷ் ஆர், மோகன் குமார்.ஆர்., பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன், வம்சி காக்கா, இப்ராஹிம் காண்ட்ராக்டர்.

இந்தப் படத்தின் டீசரை இன்று மதியம் 12:12 மணிக்கு பான்-இந்தியா அளவிலான முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டனர்.

இப்படத்தின் டீசரை, தமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர்.

வழக்கமான டீசரையும் தாண்டி அமைந்துள்ள இந்த காணொலிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல புதிய மற்றும் சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், “இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப் பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்..” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ அமைந்துள்ளது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப் பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி..” என்றார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான ‘ஜிகதண்டா டபுள் எக்ஸ்’ பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

பல திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இப்படமும் இன்னும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக் குழு உறுதி செய்துள்ளனர்.

Our Score