full screen background image

“ஃபைண்டர்’ படத்தில் கதைதான் நாயகன்” – நடிகர் சார்லியின் பேச்சு!

“ஃபைண்டர்’ படத்தில் கதைதான் நாயகன்” – நடிகர் சார்லியின் பேச்சு!

Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘ஃபைண்டர்’.

இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures, தயாரிப்பாளர்கள் – ரஜீஃப் சுப்பிரமணியம் &  வினோத் ராஜேந்திரன், இயக்கம் – வினோத் ராஜேந்திரன், ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி, படத் தொகுப்பு – தமிழ்குமரன், கலை இயக்கம் – அஜய் சம்பந்தம், இசை – சூர்ய பிரசாத், பத்திரிக்கை தொடர்பு – A.ராஜா.

இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக் குழுவினருடன்,  திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் சார்லி பேசும்போது, “இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் பெருக்கமானது, அண்ணன் வைரமுத்து அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்குவது எங்கள் குழு அனைவருக்கும் பெருமை, இந்தப் படத்தில் பெரிய கதாநாயகன்கள் இல்லை. இந்த படத்தில் கதைதான் நாயகன். வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுத ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குநர் வினோத். வைரமுத்து அவர்கள் நல்ல கவிஞர் என்பதைவிடவும் மிகவும் நல்ல மனிதர். நன்றி மறவா மனிதர். இந்தப் படம் பலரது உழைப்பில் உருவானது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி..” என்றார்.

தயாரிப்பாளர் G.தனஞ்செயன் பேசும்போது, “இந்தப் படத்தின் போஸ்டரை பார்த்தவுடன் இந்த விழாவிற்கு வர ஒப்புக் கொண்டேன். அழைப்பிதழில் சார்லி இருந்தார். சார்லி பல படங்களில் நடித்துள்ளார். அவர் நல்ல மனிதர். பல சாதனைகளை புரிந்துள்ளார். இன்றளவும் நாடக மேடையில் நடித்து வருகிறார். அவர் 1,000 படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், அவர் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘எறும்பு’ போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  அவரது நடிப்பில், இந்தப் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.  

இயக்குநர் வினோத்திற்கு எனது வாழ்த்துகள். எந்த ஒரு கவிஞரும் எட்டாத உயரத்தில் உள்ள வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ளார் சிறிய படைப்பிற்கு ஆதரவு கொடுத்த அவருக்கு எனது நன்றிகள்.  மக்கள் மத்தியில் இன்னும் இந்தப் படத்தை கொண்டு செல்ல வேண்டும். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடையும்…” என்றார்.

இசையமைப்பாளர் சூர்யபிரசாத் பேசும்போது, “இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலமாகவும், அடையாளமாகவும் வைரமுத்து சார் உள்ளார். அவரது வரிகளுக்கு நான் இசையமைத்தது எனக்கு கனவு  மாதிரி இருந்தது, இன்றும் என்னால் இதை நம்ப முடியவில்லை. எங்கள் தேவை அறிந்து அட்டகாசமான பாடல் வரிகளை கொடுத்தார். சார்லி சாருக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் செண்ட்ராயன் சாரும் நன்றாக நடித்துள்ளார், என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி.  இந்தப் படத்தில் இயக்குநர் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.

தயாரிப்பாளர் குஞ்சுமோன் பேசும்போது, “இந்த விழாவிற்கு என்னை அழைத்த படக் குழுவிற்கு எனது  வாழ்த்துக்கள். இது போல திறமையான இளம் தலைமுறை படைப்பாளிகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டும். சார்லி எனது முதல் படத்திலிருந்து நடிக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.  தயாரிப்பாளர் சுப்ரமணி அவர்களுக்கு எனது வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி..” என்றார்.

நடிகர் செண்ட்ராயன் பேசும்போது, “இயக்குநர் வினோத் மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. படக் குழு அனைவருமே மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். அதற்கேற்ற பலனை நாங்கள் அடைந்துவிட்டோம். வைரமுத்து சார் எங்களுடன் இணைந்தது பெரும் ஆதரவு, தயாரிப்பாளர் சுப்ரமணி சார் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்.  படம் நன்றாக வந்துள்ளது..” என்றார்.

அரபி புரொடக்சன்ஸ் வெற்றி பேசும்போது, “இந்த அரபி தயாரிப்பு மூலம் ஈழத்தில் பதினைந்து ஆண்டுகள் பல படைப்புகளை கொடுத்துள்ளோம், இன்று எங்களின் முதல் தமிழ் படைப்பு விழாவில் நன்றி தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் வினோத் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். மேலும் கவிஞர் வைரமுத்து ஐயா அவர்களுக்கும் எனது நன்றி.  அவர் இந்தப் படத்திற்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளார், நடிகர் சார்லி அவர்களுக்கும் எனது நன்றி, ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்து வந்துள்ள சோசியல் மீடியா நண்பர்களுக்கு எங்களது நன்றி. படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி. ஒரு சிறந்த படைப்பை எங்களுக்கு அளித்துள்ளனர். இங்கு வந்து விழாவை சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றிகள்…” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் வினோத் ராஜேந்திரன் பேசும்போது, “இந்த விழாவிற்கு வந்ததோடு அல்லாமல், இப்படத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்த அய்யா வைரமுத்து, நடிகர் சார்லி ஆகியோருக்கு என் நன்றிகள். படத்தில் அனைவருமே தங்கள் படம் போல் கருதி மிக கடினமான உழைப்பை  தந்துள்ளார்கள். நாங்கள் நினைத்ததை சுவாரஸ்யமான படமாக உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும்  படம் கண்டிப்பாக  பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்..” என்றார்.

Our Score