மருதம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் M.A.G.பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாகுவேல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராக்கதன்’.
இந்தப் படத்தில் வம்சி கிருஷ்ணா, ரியாஸ்கான், நிழல்கள் ரவி, காயத்ரி ரெமா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன், விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன் ஆகியோர் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ளார். ஆர்.தண்டாயுதபாணி கிரியேடிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். மனாஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஏ.பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். பாபு கிறிஸ்டியன், இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் பாடல்கள் எழுத, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். இன்ப பிரகாஷ் கலை இயக்குநராக பணியாற்ற, சரவெடி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பத்திரிகை தொடர்பு – கிளாமர் சத்யா.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் துன்பங்களை மட்டுமே படமாக்கி வரும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ஆண் தனது குடும்பத்திற்காகவும், தனது கனவிற்காகவும் எதிர்கொள்ளும் துன்பங்களை பற்றி பேசும் பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.
கடந்த ஜூன் 7-ம் தேதி ’இராக்கதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியில் பேசிய திரை பிரபலங்கள், தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘இராக்கதன்’ திரைப்படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் படத்தை பார்க்க கூடிய ஆவலை தூண்டுகிறது, என்று கூறி வாழ்த்தினார்கள்.
பாடல்கள் மற்றும் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைத்திருக்கும் படக் குழுவினர் இந்த ‘இராக்கதன்’ படத்தை வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.









