full screen background image

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 75-வது படம்

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 75-வது படம்

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக் குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தினை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நீலேஷ் கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பானது திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.

ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில்  இருக்கும்.

Our Score