full screen background image

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் எழில் இயக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் எழில் இயக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படம்

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்.’

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம்’, ‘அரண்மனை-1’ மற்றும் ‘அரண்மனை-2’, ‘மாயா’, ‘பாகுபலி-1’, ‘சென்னை 28 – 2’, ‘இது நம்ம ஆளு’, ‘காஞ்சனா’, ‘சிவலிங்கா(தெலுங்கு)’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்த தயாரிப்பாளரான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது  அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.

முதல் படமாக ‘சொல்லாமலே’ துவங்கி, ‘பிச்சைகாரன்’வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சசியின் இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்கிற படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திகில் படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடித்திருக்கிறார். மேலும், சதீஷ், ஆனந்தராஜ், சம்ஸ், நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மதுமிதா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், வையாபுரி, வெண்பா, மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – அபிஷேக் பிலிம்ஸ், தயாரிப்பாளர் – ரமேஷ் பி.பிள்ளை, ஒளிப்பதிவு – யூ.கே.செந்தில் குமார், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, இசை – சத்யா, பாடல்கள் – யுகபாரதி, விவேக், ராகேஷ், ‘கருங்குயில்’ கணேஷ், சண்டை பயிற்சி – ‘கனல்’ கண்ணன், கலை இயக்கம் – எம்.யூ.ஜெயராமன், உடைகள் – சண்முகபிரியா, நடன இயக்கம் – தினேஷ், தினா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன் கதை & வசனம் – எ. முருகன், திரைக்கதை, இயக்கம் – எஸ்.எழில்.

இந்தப் படத்தை ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ ‘தீபாவளி’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘தேசிங்கு ராஜா’ போன்ற வெற்றிப் படங்களை தந்த இயக்குநர் எழில் இயக்கியிருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்த சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின்  கதை.

இந்த திகில் படத்தை, மிகவும் ஜனரஞ்சகமாக தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து, மிகவும் சுவராஸ்யமாக படைத்திருக்கிறார் இயக்குநர் எழில்.

Our Score