மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்ய சிவா இயக்கத்தில் ‘கழுகு-2’ படத்தை மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வருகிறார்.
விரைவில் வெளிவர உள்ள இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட்செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள ‘வால்டர்’ என்ற படத்தையும் சிங்காரவேலன் தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகர்கள் வேடத்தை ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – சதீஷ்குமார், இசை – ரதன், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் – A.R.மோகன், நடனம் – தஸ்தா, ஷெரிப், சண்டை பயிற்சி – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – U.அன்பரசன். இது இவர் இயக்கும் முதல் படமாகும். தயாரிப்பு – சிங்காரவேலன்.
படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக ‘வால்டர்’ படம் உருவாகவுள்ளது.










