ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால், இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட் வினோதினி ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், கலை – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா, தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் – C.பிரேம்குமார்.
இவர் ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றம் வித்தியாசமான கதாபாத்திரம் என கொடி கட்டி பறக்கும் விஜய் சேதுபதிக்கு 96 படமும் வித்தியாசமான படமாக இருக்கும்.
இந்த படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக அழகான அதே சமயம் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த அரங்கில் விஜய் சேதுபதி, திரிஷா, காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 300 துணை நடிகர், நடிகைகள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர்.









