full screen background image

சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் ’80-ஸ் பில்டப்’!

சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் ’80-ஸ் பில்டப்’!

காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை ரசிக்கும்படியான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சந்தானம், தற்போது ’80-ஸ் பில்டப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ், சூப்பர்குட் சுப்பிரமணி, தங்கதுரை, ‘கும்கி’ அஸ்வின், நெபு சாமி, கலைராணி என்று முன்னணி நடிகர், நடிகையர்கள் நடித்துள்ளனர்.

நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமி இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாக இது அமைந்து இருக்கிறது என்பது சோகமான விஷயம்.

1980-களில் நடக்கும் இந்த படத்தின் கதை ஃபேன்டசி டிராமாவாக உருவாகி வருகிறது. 1980 காலக்கட்டத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்டிருப்பதால், இதற்காக உடை, இடம் ஆகியவற்றில் படக் குழுவினர் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளவுலகத்தில் வைரலாகி வருகிறது.

Our Score