Film Industry Differently Abled Artiste Welfare Association (FIDAAWA) என்பது மாற்றுத் திறன் படைத்த திரைப்பட கலைஞர்களுக்கான சங்கம்.
இந்த சங்கத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி கலைஞர்கள் நடிக்கும் ‘5-G’ என்ற படத்தை தங்கள் (FIDAAWA) அமைப்பின் சார்பில் தயாரிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் பிறந்த மாற்றுத் திறனாளி கலைஞரான கே.பி.ராஜ பாலாஜி இந்த திரைப்படத்தினை இயக்க உள்ளார்.
உலகத்தின் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளையும் ஒருங்கிணைத்து மனித நேயத்தை உருவாக்கவே இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது.
இந்த படத்தில் தமிழ் திரையுலக நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தங்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்த இத்திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.
உலக மாற்றுத் திறனாளிகளின் தினமான டிசம்பர் 3-ம் தேதியன்று இந்த திரைப்படம் ஆரம்பமாகவுள்ளது.









