full screen background image

கேன்ஸ் பட விழாவுக்கு இயக்குநர் சங்க உறுப்பினர்களின் 5 படங்கள் தேர்வு..!

கேன்ஸ் பட விழாவுக்கு இயக்குநர் சங்க உறுப்பினர்களின் 5 படங்கள் தேர்வு..!

பெங்களூருவில் உள்ள IFA நிறுவனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து குறும் படங்களை தயாரிக்க முன் வந்தது.

இதில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, 25 குறும் படங்கள் தயாரிக்கப்பட்டன.

இந்தப் படங்கள் கடந்த வருடம் பெங்களூருவில் நடந்த உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அதில் திரு.சுப்ரமணிய பாரதி அவர்கள் இயக்கிய ”பாஞ்சாலி” என்ற குறும் படம் முதல் பரிசை வென்றது.

இந்த 25 குறும் படங்களில் 15 குறும் படங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டன.

திரு.ராஜாசெல்லமுத்து அவர்கள் இயக்கிய ”தொப்புள் கொடி”

திரு.ஸ்ரீராம் அவர்கள் இயக்கிய  ”சாயுபும் நானும்”

திரு.சுவாமி ராஜலிங்கம் அவர்கள் இயக்கிய ”தண்டனை”

திரு.ஏ.வி.கிரி அவர்கள் இயக்கிய ”மரப்பாச்சி பொம்மைகள்”

திரு.அசோக் பாண்டியன் அவர்கள் இயக்கிய “ஸ்டார்ட் கேமிரா ஆக்‌ஷன்”

திரு.வீரசிங்கம் அவர்கள் இயக்கிய “பால்நிலா பயணம்”

திரு.கங்கையின் செல்வன் அவர்கள் இயக்கிய “ஆன்மாவின் ஆயுதம்”

திரு.கல்யாணசுந்தரம் பால்சாமி அவர்கள் இயக்கிய ”கொடுப்பினை”

திரு.பூமிநாதன் அவர்கள் இயக்கிய “சான்றோன்”

திரு.ரமேஷ் அவர்கள் இயக்கிய “அம்மாவின் கதைகள்”

திரு.அன்பரசன் அவர்கள் இயக்கிய “லைஃப் ஆப் மூக்கன்”

திரு.பாக்யராஜ் பரசுராமன் அவர்கள் இயக்கிய “செங்கொடி”

திரு.சுப்ரமணியபாரதி அவர்கள் இயக்கிய “பாஞ்சாலி”

திரு.வெற்றிவேலன் அவர்கள் இயக்கிய “சரணாலயம்”

திரு.ஜெயராஜ் அவர்கள் இயக்கிய “கருணை”

ஆகிய 15 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அவைகள், இந்த 2023-ம் வருடம் மே மாதம் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் உலக திரைப்பட விழாவின் குறும்பட போட்டிக்காக அனுப்பப்பட்டது.

இதில்,

திரு.ஸ்ரீ ராம் அவர்கள் இயக்கிய ”சாயுபும் நானும்”

திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் இயக்கிய ”கொடுப்பினை”

திரு.பூமிநாதன் அவர்கள் இயக்கிய “சான்றோன்”

திரு.பாக்யராஜ் பரசுராமன் அவர்கள் இயக்கிய  ”செங்கொடி”

திரு.வெற்றிவேலன் அவர்கள் இயக்கிய “சரணாலயம்”

ஆகிய 5 திரைப்படங்கள் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் போட்டிக்காக திரையிட ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கேன்ஸ் உலக திரைப்பட விழாவில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களின் படங்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட குறும் படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இயக்குநர்களும், துணை இயக்குநர்களும், சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களை இயக்கிய இயக்குநர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Our Score