full screen background image

கவுண்டமணி நடித்த ’49-ஓ’ திரைப்படத்தின் இசை வெளியீடு மே 18-ம் தேதி..!

கவுண்டமணி நடித்த ’49-ஓ’ திரைப்படத்தின் இசை வெளியீடு மே 18-ம் தேதி..!

காமெடி கிங் கவுண்டமணி நடித்த ’49-ஓ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 18, ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த கவுண்டமணி சில வருடங்களாக இடைவெளி விட்டிருந்தார். அதன் பின் தற்போதுதான் இந்த ’49-ஓ’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இயற்கை விவசாயம் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் கவுண்டமணிதான் விவசாயியாக நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 18-ம் தேதி நடைபெறப் போவதாகத் தகவல். கோடை விடுமுறையை ஒட்டி  இந்த மாத இறுதியிலேயே இந்தப் படம் ரிலீஸாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் மேனனிடம் பயின்ற ஆரோக்கிய தாஸ் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். கவுண்டமணி ஜோடியாக பிரபல முன்னணி நடிகையொருவர் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, ஜான் விஜய், விடிவி.கணேஷ், சோமசுந்தரம், திருமுருகன், விருமாண்டி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 

Our Score