சேப்டி ட்ரீம் புரொடக்ஷன், ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன், மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா, சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்களான என்.செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘4 ஸாரி’.
இ்ந்தப் படத்தில் ஜான் விஜய், காளி வெங்கட், ரித்விகா, சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பிரசன்னா சிவராமன் இசை அமைத்திருக்கிறார். சக்திவேல் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “வல்லக்கோட்டை’ படத்திற்கு பிறகு நான் இயக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படம் சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு ‘4 சாரி’ என பெயரிடப்பட்டுள்ளது.
நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. படத்தில் நான்கு தனித்தனி கதைகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு மனிதனும் தனது தவறை உணர்ந்து ‘சாரி’ சொல்லும்போது அவனது வாழ்க்கை எப்படி திசை மாறும் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது. படம் நாளை வெளியாகிறது. நிச்சயமாக ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்...” என்றார்.