full screen background image

“இன்னும் 3 பேருக்கு பால்கே விருது வழங்க வேண்டும்” – கவிஞர் வைரமுத்துவின் கோரிக்கை..!

“இன்னும் 3 பேருக்கு பால்கே விருது வழங்க வேண்டும்” – கவிஞர் வைரமுத்துவின் கோரிக்கை..!

தமிழ் திரைப்படத் துறையில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் தகுதியானவர்கள் மேலும் மூன்று பேர் இருப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்திய சினிமா துறையின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு தனது வாழ்த்துக்களை டிவீட்டர் மூலமாகத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இது குறித்து வைரமுத்து தனது டிவீட்டர் பக்கத்தில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த்.

ஊர் கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதி மிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் மத்திய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்…” என குறிப்பிட்டுள்ளார்.

 
Our Score